
பண மோசடி வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பனங்காட்டுப் படை கட்சியைச் சேர்ந்த ஹரிநாடார் பெங்களூர் சிறையில் வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றது தொடர்பான வழக்கில் தற்போது தமிழக போலீசார் ஹரிநாடாரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 16 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே ஹரிநாடார் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.