Skip to main content

மாணவிக்கு பாலியல் தொல்லை; கல்லூரி முதல்வர் மீது வழக்குப் பதிவு

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

harassment of a student; Case registered against college principal

 

சென்னை உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை நந்தனத்தில் செயல்படும் உடற்கல்வியியல் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் மாணவி ஒருவருக்கு கல்லூரியில் முதல்வராக பணிபுரியும் ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவி சைதாப்பேட்டை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.

 

விசாரணையில் மாணவிக்கு செல்போன் மூலமாக ஜார்ஜ் ஆபிரகாம் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். மேலும் கடந்த 3 மாதங்களாகவே தனது செல்போனிற்கு தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆதாரங்களையும் மாணவி காவல்நிலையத்தில் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. புகாரின் உண்மைத் தன்மை குறித்த விசாரணையும் நடைபெறுவதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். 

 

இந்தப் புகார் தொடர்பாகக் கல்லூரி முதல்வர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.