Skip to main content

திருவாடுதுறை ஆதின பகுதியில் துப்பாக்கிச் சூடு -இருவர் படுகாயம்

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

ஆதினங்களோ அல்லது ஆதீனத்தில் பணியாற்றுபவர்களோ ஏதாவது சிக்கல்களில் சிக்கி சர்ச்சையாக்குவதே வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் திருவாடுதுறை ஆதீனத்தின் மெய்க்காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

thiruvaduthurai

 

மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் உள்ள திருவாடுதுறையில் உள்ளது ஆதீனம். தொன்மை வாய்ந்த இந்த ஆதீனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துக்கள் நிலங்களாகவும், மலைகளாகவும், தோட்டங்களாகவும், கட்டிடங்களாகவும் உள்ளன. இந்த சொத்துக்களுக்காக ஆதினங்களாக இருப்பவர்களுக்குள் கோஷ்டி யுத்தங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவங்களும் நிகழ்ந்தன.
 

இந்த சூழலில் திருவாடுதுறை ஆதீனத்தின் தற்போதைய 24-வது குருமகா சன்னிதானமாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். அவருக்கு மெய்க்காவலராக நாகப்பட்டிணம் மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த ஜெகன்ராஜா என்பவரை தமிழக காவல்துறை நியமித்துள்ளது.

 

thiruvaduthurai

 

ஜெகன்ராஜா திருவாடுதுறை கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் பெண்மணி ஒருவரிடம் சில காலமாக பேசி வந்துள்ளார். இந்தநிலையில் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் அக்கடைக்கு வந்த காவலர் ஜெகன்ராஜா அந்த பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். இதைக்கண்ட திருவாவடுதுறை, மேலவீதியைச் சேர்ந்த மதி என்பவர் அந்தபெண்ணிடம் காவலர் ஜெகன்ராஜா பேசுவதை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதைக்கண்ட ஜெகன்ராஜா மதியின் செல்போனை பிடுங்கிக்கொண்டு அடித்து விரட்டியுள்ளார். மதியோ தனது செல்போனை திரும்பத்தருமாறு கேட்டு மிரட்டியுள்ளார், காவலர் ஜெகன்ராஜாவோ செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். கோபமான மதி அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு செல்போனை கேட்டுள்ளார்.
 

இதனைக்கண்டு கோபமடைந்த காவலர் ஜெகன்ராஜா, மதியின் இடதுகாலில், ஆதீனத்தின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதைக்கண்ட அந்த கிராமத்தை சேரந்த நாட்டாமை செல்வராஜ் ஒடிவந்து காவலரை தட்டிக்கேட்க, அவரையும் காலில் சுட்டிருக்கிறார். இடது காலில் பாய்ந்த குண்டு காலை துளைத்துக்கொண்டு வலது காலிலும் பாய்ந்தது. அந்த சம்பவத்தை பார்த்து ஒடிவந்த திருவாடுதுறை சப்பாணித் தெருவைச் சேர்ந்த மதிவாணன்  என்பவரையும் துப்பாக்கியைக் கொண்டு தாக்கியுள்ளார்.
 

தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டதைக் கேட்டு, அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள், காவலர் ஜெகன்ராஜாவை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, அவர் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ஆத்திடமடைந்த பொதுமக்கள் காவலர் ஜெகன்ராஜாவின் இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மதி, செல்வராஜ் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து உடனடியாக மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

thiruvaduthurai

 

இந்த தகவலறிந்த குத்தாலம் போலீசார் அப்பகுதியில் பதுங்கியிருந்த காவலர் ஜெகன்ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தையடுத்து திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் ஜெகன்ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சோளக்காட்டில் பதுக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி; 2 பேருக்கு போலீசார் வலை

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

A country gun hidden in a cornfield; Police net for 2 people

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி அடுத்த ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக சோளக்காடு ஒன்று உள்ளது. ரமேஷ் தினமும் சோளக்காட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து பார்வையிடுவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்று ரமேஷ் தனது சோளக்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரியூர் - மல்லியம்மன் செல்லும் நடைபாதையில் காலணித் தடங்கள் இருந்தன. இதையடுத்து ரமேஷ் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு பகுதியில் நாட்டுத் துப்பாக்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  

 

மேலும் அந்தப் பகுதியில் பாத்திரங்களும் இருந்தன. இதுகுறித்து ரமேஷ் கடம்பூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், யாரோ மர்ம நபர்கள் ரமேஷின் காட்டில் நாட்டுத் துப்பாக்கியைப் பதுக்கி வைத்து வேட்டைக்குச் செல்லும்போது பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடம்பூர் போலீசார் ரமேஷ் காட்டை ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது நாட்டுத் துப்பாக்கியைத் தேடி அதே பகுதியைச் சேர்ந்த வேட்டையன்(62), ராமர் (39) ஆகியோர் வந்தனர். அவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

 

போலீசார் விசாரணையில் வேட்டையன், ராமர் அவர்களது நண்பர்கள் மேலும் இரண்டு பேர் சேர்ந்து வேட்டையாடுவதற்காக ரமேஷ் சோளக்காட்டில் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்தது தெரியவந்தது. வேட்டைக்குச் செல்லும் இவர்கள் மிருகங்களை வேட்டையாடி சோளக்காட்டில் கொண்டு வந்து அவற்றை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதற்காக காட்டில் பாத்திரங்களையும் வைத்திருந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேட்டையன், ராமர் இருவரையும் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

 

 

Next Story

சென்னையில் கள்ளத் துப்பாக்கி விற்பனை; ஐந்து பேர் கைது

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Counterfeit gun sales in Chennai; Five people were arrested

 

உத்தரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து கள்ளத் துப்பாக்கிகளை வரவழைத்து சென்னையில் விற்பனை செய்த விவகாரத்தில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இந்து முன்னணி சுரேஷ் என்பவர், கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.

 

பெங்களூரில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்களைக் கொண்டுவந்து புழல் மற்றும் காவாங்கரை பகுதிகளில் விற்கப்படுவதாக கொளத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்தந்த பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக 'தாத்தா' என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வரும் நபரான யோகேஷ் என்பவரைக் கைது செய்ய போலீசார் முயன்றனர். ஆனால் யோகேஷ் தலைமறைவாகிவிட்டார். போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் யோகேஷை ஒரு வழியாக கைது செய்தனர். அவருடைய செல்போனை பரிசோதனை செய்ததில் அதில் அவர் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் இருந்தன.

 

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் துப்பாக்கி குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சட்டவிரோதமாக பெங்களூரில் இருந்து மதுபானங்களை வாங்கி விற்பனை செய்ததோடு, கள்ள துப்பாக்கியையும் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசம் சென்ற யோகேஷ் இரண்டு கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து சென்னையைச் சேர்ந்த சையது அபுதாஹிர் என்பவரிடம் விற்றது தெரியவந்தது. மற்றொரு துப்பாக்கியை சங்கர் என்பவருக்கு விற்றது தெரியவந்தது. அபுதாஹிரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். அபுதாகிர், இந்து முன்னணி சுரேஷ் என்பவர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் யோகேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் நவாஸ், அஹமதுல்லாஹ் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.