Skip to main content

நாட்டு துப்பாக்கி பறிமுதல்!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
Virudhachalam

 

 

விவசாய மோட்டார் கொட்டகையில் வேட்டையாட வைத்திருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. 

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் நல்லூர் கிராமத்தில் பாஸ்கர் என்பவரின் விவசாய மோட்டார் கொட்டகையில் வேட்டையாட பயன்படுத்தும் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக விருத்தாசலம் காவல் துறைக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து திடீரென ஆய்வு செய்யப்பட்டது.

 

அப்போது வேட்டைக்கு பயன்படுத்தப்படும் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. யாருடைய நாட்டுத்துப்பாக்கி? எப்படி மோட்டார் கொட்டகைக்கு வந்தது? யார் பயன்படுத்துவது? என பல கோணங்களில் விருத்தாசலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மோட்டார் கொட்டகையின் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  

 

நாடு முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்புடன் இருக்கும் நிலையில் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கிச் சூடு; தாம்பரம் அருகே பரபரப்பு

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Shooting at lawyer's house; Bustle near Tambaram

சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த மீனாம்பாள் தெருவில் தியாகராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞர் ஆவார். வழக்கம்போல் வழக்கறிஞர் தனது மனைவி, மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது திடீரென வீட்டுக்குள் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது ஜன்னல் வழியாக வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் அந்த பகுதியில் இருந்து ஓடிச் சென்றது தெரிந்தது.

வீட்டிற்குள் துப்பாக்கி குண்டு ஒன்று விழுந்து கிடந்தது. அந்த குண்டை பார்த்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றிருக்கலாம் என அச்சமடைந்து உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், வீட்டுக்குள் ஜன்னலை துளைத்து உள்ளே வந்த துப்பாக்கி குண்டை கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வில் அது சிறிய ரக துப்பாக்கியில் இருந்த வந்த குண்டு எனத் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து வழக்கறிஞர் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கியால் சுட்ட அந்த மர்ம நபர் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கறிஞர் என்பதால் வழக்குகள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் இவ்வாறு நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Next Story

அமைச்சர் வரை சென்ற வீடியோ; தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் லைசென்ஸ் ரத்து

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

foul language to passengers; Cancellation of license of private bus driver operator

 

கடலூரில் பயணிகளிடம் தகாதமுறையில் பேசிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதில் தனியார் பேருந்துகளும் அடக்கம். இந்நிலையில், நேற்று மாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விருத்தாசலம் செல்ல ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது பயணி ஒருவர் விருத்தாசலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவா என கேட்டுள்ளார். ஆனால் விருத்தாசலம் செல்பவர்கள் மட்டுமே ஏற வேண்டும் நடுவில் நிற்காது என தெரிவித்துள்ளார் அந்த பேருந்தின் நடத்துநர். அது மட்டுமல்லாது விருத்தாசலம் இல்லாவிட்டால் பேருந்தில் ஏறக்கூடாது என தகாத முறையில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றிருந்தது.

 

அங்கிருந்த பொதுமக்களும் நடத்துநரிடமும் ஓட்டுநரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.