சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்துள்ளது வேலங்குடி. இக்கிராமத்தை சேர்ந்த பாண்டிதுரை, கார்த்திகேயன் சகோதரர்கள் தங்களுடைய காரில் சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 501 கோயில்களைத் தரிசிக்க திட்டமிட்டனர்.

Advertisment

இதற்கென பிரத்யேகமாக தங்களது காரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, இந்த பயணத்தை தொடங்கினர். சுமார் 30 லிருந்து 40 நாட்கள் வரை பயணத்தின் கால அளவாக நிர்ணயித்து திட்டமிட்டுள்ள இப்பயணம், இளைஞர்களின் ஆன்மீக சிந்தனைகளை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், உலக கின்னஸ் சாதனை முயற்சியாகவும், இப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாக சகோதரர்கள் தெரிவித்தனர்.

 Guinness World Records For Traveling To 22 States!

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 22 மாநிலங்களில் மேற்கொள்ளும் இந்த கின்னஸ் சாதனை முயற்சி பயணத்தை, மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா ரோஹித் நாதன் ஆகியோர் வாழ்த்துக் கூறி தொடங்கி வைத்தனர்.