Skip to main content

ஜிஎஸ்டி வரி உயர்வு- மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம்! 

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

GST tax hike- Central Board of Direct Taxes explanation!

 

வணிகப் பெயர் இல்லாத 25 கிலோ எடைக்கு மேற்பட்ட அரிசி உள்ளிட்டத் தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. 

 

பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது.  இந்த நிலையில், வரி உயர்வு தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. வணிகப் பெயர் இல்லாத 25 கிலோ எடை வரையில் மூட்டையில் அடைக்கப்பட்ட தானியங்களுக்கு மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

25 கிலோ எடைக்கு மேற்பட்ட அரிசி, பருப்பு, மாவு வகைகள் போன்ற பொருட்கள் கொண்ட ஒற்றை சிப்பங்களுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிகப் பெயர் இல்லாத 25 கிலோ எடையுள்ள தானிய மூட்டைகளை உற்பத்தியாளர்களிடமோ, அல்லது விநியோகஸ்தர்களிடமோ வாங்கி, அதைக் குறைந்த அளவுகளில் பிரித்து சில்லறையாக விற்பனை செய்வதற்கும் வரி இல்லை என அரசு கூறியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“போலி பில் தயாரித்தால் ஜி.எஸ்.டி பதிவு முடக்கப்படும்” - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Minister moorthy warns GST registration will be disabled if fake bill is produced

அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னையில், பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (09-02-24) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டிருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையருக்கான பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அதிகாரிகளினுடைய செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர், அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அவர்களுடைய ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.