பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மழை வெள்ளக் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா இன்று (31.01.2023) ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, சிறப்பாக செயல்பட்ட தூய்மை காவலர்கள், மாநகராட்சி அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.