Skip to main content

மகள் இறப்பு குறித்து பேத்தி சொன்ன பதில்... அதிர்ச்சியடைந்த பெற்றோர்!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி ரேணுகா. இந்த தம்பதியினருக்கு யோகிஸ்ரீ, தன்யாஸ்ரீ என இருமகள்கள் இருக்கின்றனர். நாகேந்திரன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். நாகேந்திரன் ராணுவத்தில் பணிபுரிவதால் குடும்பத்துடன் குஜராத்தில் இருக்கும் ராணுவ குடிப்பிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி ரேணுகாவின் பெற்றோருக்கு ராணுவ அலுவலகத்தில் இருந்து போன் வந்துள்ளது. அதில் ரேணுகா வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்து தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். 
 

incident



இந்த சம்பவம் குறித்து பதறிப்போன ரேணுகாவின் பெற்றோர் குஜராத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மகளின் விபத்து குறித்து கேட்டறிந்துள்ளனர். அப்போது அதிர்ச்சி தகவல் பெற்றோர்க்கு கிடைத்துள்ளது. அதில் ரேணுகா தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. பின்னர் ரேணுகாவின் உடலை சொந்த ஊருக்கு அவரது பெற்றோர்கள் கொண்டு வந்துள்ளனர்.  அவர்களுடன் வந்த ரேணுகாவின் மூத்த மகள் யோகிஸ்ரீ தனது தந்தை நாகேந்திரன் தான் தாயை தீ வைத்து எரித்துக்கொன்றதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதை கேட்ட ரேணுகாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி ஆகியோரிடம் ரேணுகாவின் தந்தை புகார் அளித்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்துவதாக கலெக்டர் மற்றும் எஸ்.பி உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மண்டை ஓட்டுடன் அகோரி; பயத்தில் மக்கள் - ஆண்மீக நகரில் அட்டகாசம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Aghori brought a skull to Tiruvannamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு முன்பெல்லாம் பௌர்ணமி நாட்களில் மட்டும்தான் லட்ச கணக்கான பக்தர்கள் வருவார்கள். அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சென்றுவிட்டு ஊருக்கு செல்வார்கள். இப்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலப்பாதை 24 மணி நேரமும் கிரிவல பக்தர்களால் நிறைந்துள்ளது.

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில பக்தர்களைத் தாண்டி இப்போது வடஇந்தியாவின் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருகிறார்கள். அப்படி வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த தேவையான வசதிகள் இல்லாததால் நகரத்தின் முக்கிய சாலைகளில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் தினம், தினமும் நகரமே போக்குவரத்து பிரச்சனையால் சிக்கி தவிக்கிறது.

அப்படித்தான் ராஜகோபுரம் அருகே முருகர் தேர் பக்கத்தில் வித்தியாசமாக ஒரு கார் சாலை ஓரமே நிறுத்தி இருந்தது. முதலில் யாரோ நிறுத்திவிட்டு சென்றுயிருப்பார்கள் என நினைத்தனர், அந்த காரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அந்த காரை எடுக்கச்சொல்லி வாகன ஓட்டிடம் சொல்வதற்கு காரின் முன்பக்கம் சென்றபோது அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

அப்போது காரின் முன்பக்க கண்ணாடி டேஸ்போர்டில் வரிசையாக மனித மண்டை ஓடுகள் வைக்கப்பட்டு இருந்தன. காரின் கண்ணாடி, பேனட் ஆகியவற்றில் டேஞ்சர் என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கார் டோர், பின்பக்க கண்ணாடியில் நிர்வாண சாமியாரின் படங்கள், ஒட்டப்பட்டு உள்ளே என்ன இருப்பது என்னவென தெரியாமல் மறைத்திருந்தது. கார் யாருடையது எனப் பார்க்க வாகன எண்ணை பார்க்க தேடியபோது வாகன எண் இருக்கும் இடத்தில் அகோரி நாகசாது என்ற பெயர் பலகை தான் இருந்தது. காருக்குள் என்ன இருக்கிறது எனப்பார்க்க இன்னமும் அதிர்ச்சியடைந்தனர். உடனே காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். நகர காவல்நிலையத்தில் இருந்து போலிஸாரும், போக்குவரத்து போலிஸாரும் அங்கே வந்தனர்.

காவல்துறையினர் காரை கண்ணாடி வழியாக சோதித்துவிட்டு, காருக்குள் மண்டை ஓடுகள், முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரின் மீது எழுதியிருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அழைத்தனர். போலிஸ் அழைத்தும் சவகாசமாக ஒரு மணி நேரம் கழித்து கழுத்து நிறைய ருத்ராட்ச கொட்டையும், நெற்றி நிறைய விபூதி பட்டையுடன் வந்தவர் நான் தான் காரின் உரிமையாளர் என்றார். காசியில் அகோரிகள் இருப்பார்களே அப்படியிருந்தார்.

Aghori brought a skull to Tiruvannamalai

அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். காரில் இருந்து இறங்கி உள்ளே வா என அழைத்தபோது, எனக்குச் சட்டம் என்று எதுவும் கிடையாது, உங்க சட்டத்தால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என் பெயர் கடவுள். நானே சிவன், நானே பிரம்மா, நானே விஷ்ணு எனக் கூறி தன் உடலில் இருந்த சில ஆடைகளை அவிழ்த்து போட்டுவிட்டு காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியும், அருவருப்பும் அடைந்த போலீசார், அவரை காருக்குள்ளேயே வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த கார் சென்னையில் பதிவு செய்துயிருந்தது. உள்ளே நம்பர் பிளேட் இருந்தது. அதன்மீது தான் அகோரி என எழுதிய போர்டு தொங்கவிட்டிருந்ததைக் கண்டறிந்தனர். 


விசாரணையில், அவர் ரிஷிகேஷ் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், கார் பார்க்கிங் செய்ய இடம் ஏதும் இல்லாததால் சாலையிலேயே நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினார். திருவண்ணாமலைக்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்துவம் வகையில் செயல்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பாமல் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூபாய் 3000 அபராதம் பெற்றுக் கொண்டு அவரை அனுப்பி வைத்ததாக குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

கடைகளுக்குள் தீ; ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Goods worth Rs 1 crore were destroyed in a fire at a shop in Tiruvannamalai

திருவண்ணாமலை நகரத்தில் ஜீன் 2 ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு இடி, மின்னலுடன், இரண்டு மணி நேரம் பெரும்மழை பெய்யத்துவங்கியது. மழை விட்டதும் அங்கங்கு ஒதுங்கியிருந்த சிலர் அந்த நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது காந்தி சிலை அருகில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மலிவான விற்பனை செய்யும் கடைக்குள் இருந்து கரும்புகை வருவதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கடையின் உள்ளே தீ பற்றி எரிவது உற்று நோக்கியவர்களுக்கு நன்றாக தெரிந்தது. உடனே அவர்கள் அலறி கூச்சல் எழுப்பினர். அங்கிருந்தவர்கள் உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு அருகில் இருந்த சிறார்களுக்கான சைக்கிள் விற்பனை கடை, விவசாயத்துக்கு, குடிநீர்க்கு தேவையான மோட்டார், பைப் கள் விற்பனை செய்யப்படும் கடைகள், கண் கண்ணாடி கடை என 4 கடைகளில்  அடுத்தடுத்து தீ பற்றி எரியத்துவங்கின. இந்த கடைகளுக்கு பின்னால் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த பெரிய குடோன்குள்ளும் தீ பரவி அதுவும் எரியத்துவங்கின. உள்ளிருந்த கண்ணாடி பொருட்கள் வெடித்து சிதறின. கடை பூட்டியிருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் உதவியுடன் கதவை உடைத்து அதன்பின் தீயை அணைத்தனர்.

Goods worth Rs 1 crore were destroyed in a fire at a shop in Tiruvannamalai

தீயணைப்புத்துறையின் இரண்டு வாகனங்கள் மட்டுமே வந்து தீயை அணைக்க துவங்கின. கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வந்தால் தீயை அணைத்திருக்கலாமே என காவல்துறை அதிகாரிகள் கேட்டபோது, மற்ற வாகனங்கள் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது, அதனை கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லை என்றனர் தீயணைப்பு அதிகாரிகள். இதனால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. நகராட்சி மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் தண்ணீரை கொண்டுவந்து தீயணைப்பு வாகனங்களில் நிரப்பியபடி இருந்தன. சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விடியற்காலை 3 மணி அளவில் தீ அணைக்கும் பணி முழுமையாக முடிவடைந்தது. மழை பெய்ததால் தீ விபத்தை இன்னும் பெரியளவில் பரவாமல் கட்டுப்படுத்த முடிந்தது.

இந்த விபத்து மூலமாக தோராயமாக சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியுள்ளன என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள். தீ விபத்து வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை மையத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதற்குள் எப்படி விபத்து ஏற்பட்டது?, இது விபத்தா? சதியா? என திருவண்ணாமலை நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்