Skip to main content

“நண்பர்களே... சன்னி லியோனுக்கு ஐ லவ் யூ சொல்லிட்டேன்” - குஷியான ஜி.பி முத்து

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

gp muthu talk sunny leone viral video

 

“பத்திரிகை நண்பர்களே...சன்னி லியோனுக்கு ஐ லவ் யூ சொல்லிட்டேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று ஜி.பி. முத்து பேசியது பத்திரிகையாளர்கள் இடையே கலகலப்பை ஏற்படுத்தியது.

 

டிக்டாக் மூலம் பிரபலமடைந்து தற்போது யூ டியூபில் வீடியோ வெளியிட்டு வரும் ஜி.பி. முத்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது நடந்துகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ஜி.பி. முத்து கால் பதித்தார். இதனால் உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஜி.பி. முத்து குறித்த செய்திகளை வைரலாக்கி வந்தனர். இந்நிலையில், தன்னுடைய மகனுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி. முத்து வெளியேறினார்.

 

இதனையடுத்து கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஜி.பி. முத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது " பத்திரிகை நண்பர்களே...ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கும் 3 படத்துல நடிச்சிருக்கேன். இன்னும் நிறைய படங்கள் நடிக்கப் போறேன். பிக் பாஸ் அனுபவம் சிறப்பாக இருந்துச்சு. அந்த நிகழ்ச்சியில நடிகர் கமல்ஹாசனை நேரில் பார்த்ததே மிகப்பெரிய பாக்கியம். என்னோட குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை. அதுனால்தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துட்டேன்" என ஜி.பி. முத்து தெரிவித்தார்.

 

அதன்பிறகு, சன்னி லியோன் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு “சன்னி லியோனுடன் படத்துல நடிச்சது சந்தோஷமா இருக்கு. அவங்களுக்கு தமிழ் தெரியல. வேற ஏதோ மொழி பேசுறாங்க. மொழிபெயர்ப்புதான் பண்ணாங்க” என்று தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தமிழில் ஒளிபரப்பாகும் சன்னி லியோனின் நிகழ்ச்சி 

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
sunny leone show will telecast in tamil

பாலிவுட்டில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றான  ‘ஸ்ப்ளிட்ஸ் வில்லா’ நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் 15 வது சீஸனின் ‘எக்ஸ் ஸ்க்வீஸ் மீ ப்ளீஸ்’ என்ற அறிமுகப்பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனது புதிய இணை தொகுப்பாளர் நடிகர் தனுஜ் விர்வானியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.

இந்த வீடியோ பாடலை தனது சமூகவலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் சன்னி லியோன். ‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்’ நிகழ்ச்சியின் 15 வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே. ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் இந்த சீசன் ஜியோ சினிமாவில் தமிழில் ஒளிபரப்படும்.