Skip to main content

"வேலை கிடைக்காவிட்டால் நானும் எனது பிள்ளைகளும் இறந்து விடுவோம்" - கண்ணீருடன் மனு கொடுத்த பெண்

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

govt Officer were shocked see the petition given by the woman Cuddalore

 

ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது கடலூர் அருகே உள்ள பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த கதிர்காமன் என்பவரது மனைவி ரேவதி தனது இரு குழந்தைகளுடன் வந்து கண்ணீர் விட்டு அழுதபடியே ஒரு மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்தார்.

 

அதில்,  “எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. நான் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகிறேன். ஓரளவு படித்துள்ள எனக்கு ரேஷன் கடை விற்பனையாளர் பணி கேட்டு ஐந்து ஆண்டுகளாகக் கூட்டுறவுத்துறையில் மனு கொடுத்து அலைந்து வருகிறேன். எந்த அதிகாரியும் என் நிலைமையை கண்டுகொள்ளவில்லை.

 

எனவே தாங்கள் எனக்கு ரேஷன் கடை விற்பனையாளர் பணி வழங்கி என் பிள்ளைகளையும் என்னையும் காப்பாற்றுவதற்கு உதவ வேண்டும். வேலை கிடைக்காவிட்டால் நானும் எனது பிள்ளைகளும் தயாராக வைத்துள்ள விஷம் அருந்தி மூவரும் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை” என ரேவதி குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் மற்றும் பொது விநியோகத் திட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோரிடம் ரேவதியின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதில் பரிந்துரை செய்து கொடுத்துள்ளார்.

 

மனு கொடுத்த ரேவதியிடம் உனது மனுவை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் நீங்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிட்டு பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.