Skip to main content

தொப்பூர் கணவாயில் அரசு பேருந்து விபத்து; 25 பேர் காயம்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Govt bus accident at Toppur Pass; 25 people were injured

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே அரசு பேருந்து விபத்தாகி 25 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தொப்பூர் கணவாய். இந்த பகுதியை அதிகமாக வாகன விபத்துக்கள் நடைபெறும் பகுதியாக இருந்து வருகிறது. தொப்பூர் கணவாய் பகுதியில் சாலை போடும் பணி நடைபெற்று வருவதால் ஒரு சாலையில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த 5B என்ற எண் கொண்ட அரசு பேருந்து ஆஞ்சநேயர் கோவில் அருகே  சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை ஒட்டியுள்ள புதர் பகுதிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 25 பேர் காயத்துடன்  மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிவேகமாக வந்த சொகுசு கார்; சாலையோரம் படுத்துறங்கிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
happened to the young man lying on the side of the road in chennai

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று பெசன்ட் நகர் சாலையோர நடைபாதையில் படுத்திருந்தார். இவர் மது அருந்திவிட்டு போதையில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில், அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார், சாலையோரம் படுத்திருந்த சூர்யா மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், காரை மறிக்க முயன்ற போது காரில் இருந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து காருடன் தப்பி சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காருடன் தப்பிச் சென்ற இரண்டு பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த இளைஞர் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆற்றில் வேன் கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலியான சோகம்!

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Van overturned in river accident in uttarkhand

உத்தரகாண்ட் மாநில, ருத்ரபிரயாக் மாவட்டத்தில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. 23 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த வேன், ரைடோலி அருகே ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் மற்றும்  மீட்புக் குழுவினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், பள்ளத்தாக்கில் விழுந்த வேனில் இருந்தவர்களை மீட்க முயற்சி செய்தனர். அதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதில் படுகாயமடைந்த மற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த்னார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ‘ருத்ரபிரயாக் மாவட்டத்தில் வேன் விபத்துக்குள்ளானதாக வந்த செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது. மீட்பு குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை அளிக்க வேண்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.