Skip to main content

"நான் வகிக்கும் பதவி எப்போது சலிப்பை ஏற்படுத்துகிறதோ... அப்போது விலகி விடுவேன்" - ஆளுநர் ஆர்.என். ரவி

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

governor rn rvai intrect with maraikayarpattinam kendriya vidyalaaya school students 

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் (ஏப்ரல் 18 மற்றும் 19) பயணமாக  ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

 

ஆளுநரின் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக மரைக்காயர் பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் நேற்று (18.04.2023) கலந்துரையாடினர். மேலும் பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து மாணவ மாணவியர்களின் பல்வேறு  கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் பார்த்து ரசித்தார்.

 

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதிலளித்து பேசினார். அப்போது ஒரு மாணவர் ‘‘முன்பு நீங்கள் காவல்துறை உளவுப் பிரிவில் இருந்தீர்கள். இப்போது ஆளுநர் பதவியில் இருக்கிறீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள். இதில் எது உங்களுக்கு மனநிறைவை தருகிறது’’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர், ‘‘நான் வகிக்கும் பதவி எப்போது எனக்கு சலிப்பை ஏற்படுத்துகிறதோ... அப்போது என் பணியிலிருந்து விலகி விடுவேன்” என்று தெரிவித்தார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நாகாலாந்து, அஸ்ஸாம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைப் பற்றிப் பேசிய ஆளுநர்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

நாகாலாந்து தினம் மற்றும் அஸ்ஸாம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, நேற்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் கொண்டாடப்பட்டது. இதில், நாகாலாந்து மற்றும் அஸ்ஸாம் மக்களின் பாரம்பரிய நடனமான நாகா வாரியர்ஸ் நடனம் மற்றும் பிஹு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசியதாவது; “தமிழ்நாடு அதிலும் குறிப்பாக சென்னை, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர்களை நான் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் பெண் குழந்தைகள் சென்னையில் படிக்கிறார்கள் என சொல்லும்போது அவர்கள் சிறிதும் கவலை இன்றி இருப்பதை அவர்கள் பேச்சில் என்னால் உணர முடிகிறது” என்று பேசினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு - ஒப்புதல் தர ஆளுநர் மறுப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Former Minister K.C. Case against Veeramani' - Governor's refusal to approve

 

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கும், அரசால் அனுப்பப்பட்ட கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 39 பேர் மீது பரிசீலனையில் உள்ளது. ஒருவரை விடுதலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையும் ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். அதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்ய ஆவணங்கள் குறைவாக உள்ளதாகக் கூறி ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்