அரசுப் பள்ளி, கல்லூரிகளை சுழற்சி முறையில் திறந்திடக் கோரி இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "கடந்த 10 மாதகாலமாக, பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாததால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள்வேலைக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மாணவர்கள் கல்வி நிலையங்களைவிட்டு அகலும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை தடுத்து நிறுத்த உடனடியாக அரசுப் பள்ளி கல்லூரிகளை சுழற்சி முறையில் திறந்திட வேண்டும்" என்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.