Skip to main content

'அரசு குடியிருப்பை உடனே காலி செய்ய முடியாது'-முன்னாள் துணைவேந்தர் சூரப்பா 

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

'Government housing cannot be vacated immediately' - Former Vice-Chancellor Surppa

 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா, கடந்த 11ஆம் தேதியோடு ஓய்வுபெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருந்த நிலையில், துணைவேந்தரின் மூன்று ஆண்டு பதவிக் காலம் முடிவடைந்ததால், அவர்  கடந்த 11ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

 

துணைவேந்தராக இருந்தபோது அவருக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பை அவர் உடனடியாக காலி செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், “குடியிருப்பை உடனடியாக காலி செய்ய முடியாது. தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னையில் தங்க உள்ள நிலையில், குடியிருப்பை காலி செய்ய இரண்டு மாதமாவது அவகாசம் தேவை. இதற்கு முன் துணைவேந்தராக இருந்தவர்கள் அரசு ஒதுக்கிய குடியிருப்பை உடனடியாக காலி செய்யவில்லை. பிற முன்னாள் துணைவேந்தர்களுக்குத் தரப்பட்ட சலுகை எனக்கும் தரப்பட வேண்டும்” என சூரப்பா தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வெளியான தரவரிசை பட்டியல்; பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Publishth Rank List; Date Notification of Engineering Consulate

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி (06.05.2024) முதல் கடந்த 6 ஆம் தேதி (06.06.2024) வரை நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்தனர். தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 10.06.2024 மற்றும் 11.06.2024 என இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதுவரை தமிழக முழுவதும் 2.50 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டுள்ளார். சான்றிதழ் பதிவேற்றிய ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.org  என்ற இணையதளத்தில் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் கவுன்சில் ஜூலை 22 ஆம் தேதி தொடங்க உள்ளது என தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் அறிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு 22ஆம் தேதி தொடங்கி நடைபெறும் எனவும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 29 ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“பெரியார் பல்கலை. துணை வேந்தருக்குப் பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது” - திராவிடர் விடுதலைக் கழகம்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
demands that Vice-Chancellor of Salem Periyar University should not be given extension

தமிழ்நாடு ஆளுநர் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தருக்குப் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் பதவிக் காலம் ஜூன் மாதம் 30 தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் தனக்கு மீண்டும் பணி நீடிப்பு‌ப் பெற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். தனியார் நிறுவனத்தைப்‌ பல்கலையில் துவங்கியது‌, பட்டியலின‌‌ மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையைப்‌ பின்பற்றாதது‌, தமிழ்நாடு அரசு பதிவாளரைப் பணி இடை நீக்கம் செய்யுமாறு அனுப்பிய கடிதத்திற்கு‌ மதிப்பு அளிக்காமல்‌ பதிவாளரைப் பணியிலிருந்து விடுவித்தது‌, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது‌‌ போன்ற‌ குற்றச்சாட்டுகள் ‌இவர்‌ மீது உள்ளன. மேலும் ஊழல்‌ தொடர்பாகக்‌ கைது நடவடிக்கையையும் எடுத்து உள்ள நிலையில் அவருக்கு‌ப் பணி நீட்டிப்பு வழங்க முடிவு செய்வது கண்டனத்திற்குரியது.

மேலும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் பல்வேறு புகார் மனுக்களை‌ அளித்து உள்ளன. ஆகவே, தமிழ்நாடு அரசு இம்மாத இறுதிக்குள் துணைவேந்தர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் துணை வேந்தர் மீது‌ நடவடிக்கை எடுக்க தமிழ்நாட்டரசுக்கு உடனடியாக அனுமதி அளிக்க‌ வேண்டும். ஊழல் குற்றச்சாட்டில்‌ சிக்கி உள்ள துணை வேந்தருக்குப் பணி‌ நீட்டிப்பும் வழங்கக்‌ கூடாது. விரைவில் ஒரு நல்ல ஊழலற்ற துணை வேந்தரை‌ உடனடியாக‌ நியமிக்க வேண்டும்.

இது தொடர்பாக பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் ஆளுநருக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும்‌‌ அளித்துள்ள புகார்கள் மீது‌ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌த் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

The website encountered an unexpected error. Please try again later.