Skip to main content

அரசு மருத்துவர்கள் சம்பளம் கேட்டு போராட்டம்

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Government doctors are strikingling g for salary

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவம் இல்லாத ஊழியர்கள் என 1800க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாத ஊதியம் வழங்கவில்லை என சனிக்கிழமை மருத்துவமனை வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மனோகர், பழனிவேல், ரவி, மருத்துவர் பாலாஜி சாமிநாதன், மருத்துவர் ராமநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து தமிழக அரசு உடனடியாக சம்பளம் வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். தமிழக அரசு இன்னும் காலதாமதம் ஏற்படுத்தினால் போராட்டம் தீவிரமடையும் எனவும் அறிவித்துள்ளனர். மேலும், ஒவ்வொரு மாதமும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் இல்லாத ஊழியர்களுக்கு தங்குதடையின்றி சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.

Next Story

திருமாவளவனை கிராமத்திற்கு அழைப்பதில் போட்டி; வி.சி.கவினர் இடையே மோதல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Clash between VCk over inviting Thirumavalavan to village

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வி.சி.க., வேட்பாளரும் அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன், அமைச்சர் பன்னீர்செல்லம் தலைமையில் புவனகிரி ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். மருதுாரில் ஓட்டு சேகரித்தவர், நிகழ்ச்சியில் திட்டமிட்டவாறு அருகில் உள்ள பகுதிகளுக்கு ஓட்டு சேகரிக்க சென்றார். இதில் வி.சி.க., இளைஞர்கள் கிருஷ்ணாபுரம், நத்தமேடு, ஜெயங்கொண்டம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு தனித்தனியாக அழைத்தனர். அதற்கு திருமாவளவன் நேரம் குறைவாக உள்ளது. பிறகு வந்து சந்திக்கிறேன், திட்டமிட்டவாறு சில கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றார்.

இதில் சிலர் வேறு ஊருக்கு செல்லட்டும் வழி விடுங்கள்.. என்றனர். இதனால் இளைஞர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கெண்டனர். மேலும் எங்கள் ஊருக்கு வரவேண்டும் என கோரி மருதுார் – ஜெயங்கொண்டம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆனதால் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

போலீசார் இல்லாததால் மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் திருமாவளவன் வேறு ஊருக்கு ஓட்டு கேட்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின் இரவு 9.00 மணிக்கு தகவலறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக எச்சரித்தும் கண்டு கொள்ளாமல் போலீசாரிடம் முரண்பாடாகப் பேசினர். இதனால் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் குறைந்த அளவில் இருந்த போராட்டக்காரர்களை போலீசார்  விரட்டியடித்து  கலைத்தனர்,  இதனால் புவனகிரிக்கு வந்த திருமாவளவன், இரவு காலம் கடந்து வந்ததால் ஓட்டு கேட்காமல் கையை அசைத்தவாறு திரும்பிச்சென்றார்.