நடிகர் கமல்ஹாசன் நாளை 21.2.2018 -ல் அரசியல் கட்சி தொடங்குகிறார். கட்சியின் பெயர், கட்சியின் கொடி, கொள்கைகளை முதலியவற்றை மதுரையில் நாளை நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கிறார்.
முன்னதாக அவர் நாளை ராமேஸ்வரத்தில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர் மரியாதை செலுத்திவிட்டு அரசியல் பயணத்தை துவங்குகிறார். மேலும், அப்துல்கலாம் படித்த பள்ளிக்கும் கமல் சென்றுவருவதாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், அரசியல் நோக்கத்தோடு பள்ளிக்குள் வருவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து கமல் பள்ளிக்குள் வருவதற்கு கமலுக்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.