ttt

Advertisment

'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வேலை இழந்து தவிக்கும் தொழிலாளா்கள்,மீண்டும்தாயகம் திரும்ப, மத்திய அரசு 'ஏர் இந்தியா' விமானத்தை மட்டும் பயன்படுத்தி வந்த நிலையில், தனியார் விமானமான இண்டிகோவும் கடந்த ஒருமாத காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் நேற்று துபாயிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம், திருச்சி விமான நிலையத்திற்கு வந்து சோ்ந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த செய்யது, அபுதாகிர் என்பவரையும் சென்னையைச் சேர்ந்த ஜோகிந்தர் சிங் என்பவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதேபோன்று துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கோழிக்கோட்டைச் சேர்ந்த நெடும் பிரசாத், இளையான்குடியைச் சேர்ந்த கஞ்சன் அஜ்மல்கான், சென்னையைச் சேர்ந்த மைதீன் அகமது, சென்னையைச் சேர்ந்த கஞ்சன் சையது இப்ராஹிம் என்ற நான்கு நபர்கள் தங்கம் கடத்தி வருவதாகவும் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

இந்தநிலையில், மேற்கண்ட இரண்டு விமானத்தில் வந்த 6 பயணிகளிடம் இருந்து 8.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக ஒரு பெண் உட்பட மேலும் நான்கு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. இதன், மதிப்பு ரூபாய் 4.25 கோடி எனத் தெரிய வருகிறது.