GOLD MEDAL ACTOR AJITHKUMAR IN CHENNAI

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித். நடிப்பையும் கடந்து கார் ரேஸிங், பைக் ரேஸிங், சைக்கிளிங், சிறிய ரக டிரான் பறக்க விடுவது உள்ளிட்ட பலவித விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சென்னையில் இருந்து கொல்கத்தா வரை அவர் சைக்கிளிங் சென்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

GOLD MEDAL ACTOR AJITHKUMAR IN CHENNAI

Advertisment

இந்த நிலையில் சென்னை ஆவடியை அடுத்த வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை மூன்றாம் பட்டாலியனில் சென்னை ரைபிள் கிளப் சார்பில் தமிழ்நாடு அளவிலான 46- வது ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் பிரிவில்பங்கேற்ற நடிகர் அஜித்குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கடந்தஐந்து நாட்களாக நடந்த போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார், சென்டர் ஃபயர் பிஸ்டல் .32 (ISSF) 25 மீட்டர் குழு பிரிவில் வெள்ளி, சென்டர் ஃபயர் பிஸ்டல் .32 (NR) 25 மீட்டர் குழு பிரிவில் தங்கம், ஸ்டேண்டர்ட் பிஸ்டலில் .22 (ISSF) 25 மீட்டர் குழு பிரிவில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று வெள்ளி, தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.தங்கப்பதக்கம் வென்ற அஜித்தின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.