Skip to main content

தங்கக் கொலுசைத் தவறவிட்ட பெண் அதிகாரி... 

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

gold kolusu

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் சம்பந்தமாகவும், அடுத்து வரவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்தும் அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் முதன்மைக் கல்வி அதிகாரிகள் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.
 


இந்த நிகழ்ச்சிக்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பெண் கல்வி அதிகாரி தமது காரில் வந்து இறங்கினார். காணொளி காட்சி நடைபெறும் அரங்கிற்குச் சென்றவர் சிறிது நேரம் கழித்து தற்செயலாகத் தன் காலில் அணிந்திருந்த கொலுசுகளைப் பார்த்துள்ளார். அதில் ஒரு காலில் இருந்த ஒன்றரை சவரன் தங்கக் கொலுசு காணாமல் போயிருந்ததைக் கவனித்த அந்தப் பெண் அதிகாரி, திடுக்கிட்டு பரபரப்புடன் அங்கும் இங்கும் தேடினார்.
 

இவரது பரபரப்பைக் கண்டு மற்ற அதிகாரிகள் அலுவலர்கள் என்னவென்று விசாரிக்க காலில் இருந்த தங்கக் கொலுசைக் காணவில்லை என்று கூறி கண் கலங்கியுள்ளார் பெண் அதிகாரி. அவர் நடந்து சென்ற அலுவலக வளாக பகுதிகளிலும் மற்றும் அவர் வந்த கார் உட்பட பல இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். இருப்பினும் கொலுசு கிடைக்கவில்லை. இச்சம்பவம் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது பிறகு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெளுத்து வாங்கும் மழை

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Villupuram, Kallakurichi, torrential rain

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (18.07.2024) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் பகுதியில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. விழுப்புரம்  சுற்றுவட்டாரப் பகுதிகளான வண்டிமேடு, பிடாகம், முண்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், சந்தைப்பேட்டை, மனம்பூண்டி, ஆவியுர் பகுதிகளிலும் கன மழை பொழிந்து வருகிறது.

Next Story

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; 15 பேருக்கு அறிவிக்கப்பட்ட தீர்ப்பு; கதறி அழுத உறவினர்கள்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Judgment announced for 15 person ; Weeping relatives

திண்டிவனத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 15 பேருக்கு கடும் தண்டனையை நீதிமன்றம் அறிவித்திருக்கும் நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுதது பரபரப்பு ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் கோமதி. இவருக்கு ஒன்பது வயதிலும், ஏழு வயதிலும் இரு மகள்கள் உள்ளனர். புதுச்சேரியில் கூலிவேலை செய்து வந்த கோமதி தன்னுடைய இரண்டு மகள்களையும் பாட்டியின் கண்காணிப்பில் வளர்த்து வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு கோமதி தரப்பிலிருந்து ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் தன்னுடைய இரண்டு மகள்களை அதே கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுத்திருந்தார். அதில் இளைஞர்கள் முதல் 70 வயது கொண்ட முதியவர் வரை இருந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 15 பேரையும் காவல்துறை கைது செய்தது. விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஜாமீனில் 15 பேரும் வெளியே இருந்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 15 பேருக்கும் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா, 15 பேருக்கும் மொத்தம்  மூன்று பிரிவுகளின் கீழ் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டதோடு, தலா 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர். சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் 15 பேரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.