சென்னை ஓட்டேரியை அடுத்த மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாநகரப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் காலைமற்றும் மாலைவேளைகளில் மாநகரப் பேருந்துகளில் கூட்டம்அதிகமாக இருக்கும் நிலையில்,சிலஇடங்களில் பேருந்து படியில்தொங்கியபடியேபள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில்சென்னை ஓட்டேரியில் படியில் பயணம் செய்த சிறுவர்களைநடத்துனர் ராஜா மேலே ஏற சொன்னதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்களும் சிறுவர்களும் சேர்ந்து, பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளனர்.பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பேருந்தில் பயணம் செய்த சிறுவர்கள் உட்பட கல்லூரி மாணவர்கள்6 பேரைப் பிடித்தபோலீசார் அவர்களிடம்விசாரித்து வருகின்றனர்.