Skip to main content

'கன்னிமார் வந்துருக்கேன், ரோடு போட்டு கொடு' - அமைச்சர் முன் சாமியாடிய பெண்

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

 'give me a road' - the woman said before the minister

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் குழந்தைகள் மையத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார். அதேபோல் அந்த பகுதியில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்களில் ஒருவர் அமைச்சர் முன்பு சாமியாடத் தொடங்கினார்.

 

அந்த பெண்ணிடம் சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். 'எலுமிச்சை பழம் எடுத்துட்டு வாங்க' என்ற அமைச்சர், 'நீ யாரு எனக் கேட்க' 'நான் கன்னிமார் சாமி' என அந்த பெண் சொன்னார். தொடர்ந்து 'உனக்கு என்ன வேணும்' எனக் கேட்க, 'எங்களுக்கு ரோடு வசதி இல்ல; எந்த வசதியும் இல்ல' என அப்பெண் சாமி ஆடிக்கொண்டே சொன்னார். அமைச்சர் 'என்ன வேணும்.. என்ன வேணும்..' எனக் கேட்டார். ரோடு போட்டு கொடுக்கணும் என அப்பெண் சொன்னார். கொடுத்துறேன் கிட்ட வா...  வழி விட மாட்றாங்க நீ அவங்க மனசுல போய் வழிவிட சொல்லு. ரோடு போட்டு கொடுத்துறேன்' என்று கூறி எலுமிச்சை பழத்தை நீட்டினார்.

 

'நீ கூட இருந்து எங்கள காப்பாத்து.. ஊர காப்பாத்து' என்றவர், லட்டு கொடுங்காப்பா என லட்டு தட்டை சாமி ஆடிய பெண்ணிடம் நீட்டினார். 'கன்னிமார் சாமி ரொம்ப நான் விரும்புற சாமி. என்னுடைய சொந்த இடத்தை மலைவாழ் மக்களுக்கு கொடுத்ததற்கு காரணமே அதுதான். அந்த சாமியை குலதெய்வம் மாதிரி கும்பிடுவார்கள். ஊர நல்லபடியா பாத்துக்கம்மா. உங்க கோரிக்கையை 100% நிறைவேற்றி விடுகிறேன். அதான் லட்டு தரேன் சாப்பிடு' என ஒரு வழியாக சமாதானப்படுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாதயாத்திரை விபத்தில் பலியான 5 பேர்; நிவாரணத் தொகையை வழங்க அமைச்சர்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
5 lose their live in padayatra accident; Ministers to provide relief amount

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் பலியான 5 பக்தர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுகுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் வளப்பக்குடி கிராமம் அருகே நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கண்ணுகுடிப்பட்டி என்கிற ஒரே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37), மோகனாம்பாள் (27), மீனா (26), தனலட்சுமி (36) ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் நடந்து சென்ற சங்கீதா படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் கண்ணுக்குடிப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர். நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெளுத்து வாங்கும் மழை

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Villupuram, Kallakurichi, torrential rain

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (18.07.2024) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் பகுதியில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. விழுப்புரம்  சுற்றுவட்டாரப் பகுதிகளான வண்டிமேடு, பிடாகம், முண்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், சந்தைப்பேட்டை, மனம்பூண்டி, ஆவியுர் பகுதிகளிலும் கன மழை பொழிந்து வருகிறது.