Skip to main content

சொல்லாமலே படுகொலையில் முடிந்த ஒருதலைக் காதல்!

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Girl's father incident in a head-on affair

 

தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி நகரைச் சேர்ந்தவர் அய்யாக்குட்டி. நகரிலுள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருபவர். மனைவி கனகலட்சுமியோ பீடி சுற்றும் தொழிலாளி. தம்பதியருக்கு எம்.எஸ்.சி படித்த பட்டதாரியான ஆவுடைச்செல்வி (25) ஒரே மகள். இச்சூழலில் தன் மகள் ஆவுடைச்செல்விக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்ய ராயகிரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை அய்யாக்குட்டி திருமணம் பேசி முடித்திருக்கிறார். வருகிற 23ம் தேதி இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

 

திருமண ஏற்பாடுகளைக் கவனித்து வந்த அய்யாக்குட்டி, நேற்று முன்தினம் அவர், அவரது மனைவி, மகள் ஆகியோர் தனி அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் வீட்டின் முன் கதவைப் பூட்ட மறந்துவிட்டு தூங்கியுள்ளனர். நடு இரவு சுமார் 12 மணியளவில் வீடு புகுந்த மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்த அய்யாக்குட்டியை கத்தரிக் கோலால் கழுத்தில் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடியிருக்கிறார். துடிதுடித்து படுகாயமடைந்த அய்யாக்குட்டி சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார். அவரது கதறல் சத்தம் கேட்டு மனைவி மற்றும் மகள் தூக்கத்திலிருந்து பதறி எழுந்து வந்து பார்த்த போது அய்யாக்குட்டி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அலறினர்.

 

தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரணையை நடத்தியிருக்கிறார்கள். கனகலட்சுமி மற்றும் அவரது மகள் ஆவுடைச்செல்வியிடம் தனித் தனியே விசாரணை நடத்திய போலீசார் அவர்களிருவரின் அலைபேசியையும் பறிமுதல் செய்தனர். பல கோணங்களில் விசாரணை பயணித்தது.

 

பின்னர் அப்பகுதியிலுள்ள கோவிலின் பக்கமுள்ள தெரு பிற இடங்களிலுள்ள அனைத்து சி.சி.டி.வி.களிலும் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தவர்கள் அதில் பேண்ட் சர்ட் அணிந்த 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் நள்ளிரவில் பைக்கில் செல்லும் காட்சி பதிவானதைக் கண்டு அவரைத் தீவிரமாகத் தேடினர். தீவிரத் தேடுதலில் அந்த மர்ம நபரை வளைத்து விசாரித்ததில் பக்கத்திலுள்ள டி.என்.புதுக்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் என்பது தெரிய வந்திருக்கிறது.

 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்த செல்வமுருகன் தன் தந்தையுடன் காண்ட்ராக்ட் பணியிலிருப்பவர். அய்யாகுட்டியின் மகள் ஆவுடைச்செல்வி மீது தனக்கு அளவு கடந்த காதல். ஆனால் என் காதலை அவளிடம் சொல்லாமலே இருந்துவிட்டேன். ஒருதலைக் காதல். ஆவுடைச்செல்விக்கு திருமணம் பேசி முடித்து விட்டதை அறிந்த நான் அன்றைக்கு என் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டுமென்ற துடிப்பில் நடு இரவு போதையில் அவள் வீட்டிற்குச் சென்றேன். அப்ப அவளோட தந்தை தூங்கிக் கொண்டிருந்தவர் சத்தம் கேட்டு எழுந்துவிட்டார். பயந்து போன நான் திடீர்னு பக்கத்துல கிடந்த கத்தரிக்கோலால் அவரது கழுத்தில் குத்திவிட்டு வெளியே ஓடிவந்து விட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் செல்வமுருகனை கைது செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நண்பனின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு; கொடூரமாகக் கொல்லப்பட்ட கணவர்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 youth incident his friend near Ponneri

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சின்னக்காவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான லக்ஷ்மணன். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவருக்கும், மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான விஷ்ணு என்பவருக்கும் சென்னை புழல் நடுவன் சிறையில் இருந்தபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு இருவரும் சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னரும் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் லட்சுமணனின் மனைவியுடன் விஷ்ணுவிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்து பலமுறை இருவரையும் ஏற்கெனவே லட்சுமணன் கண்டித்த நிலையில் நேற்று இரவு லாவகமாக விஷ்ணு லட்சுமணனை தனது சொந்த ஊரான தோட்டக்காடு அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த லட்சுமணனை நண்பர்களுடன் சேர்ந்து விஷ்ணு சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் விஷ்ணு உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர். மனைவி உடனான திருமணத்தை மீறிய உறவை தட்டிக் கேட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை நண்பனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Next Story

இளம்பெண் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட கொடூரம்; விசாரணையில் பகீர்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
woman arrested for forcing young girl into wrong profession

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கரட்டடி பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் சத்யனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் கோபி அடுத்த கரட்டடி பாளையம், சஞ்சீவ் காந்தி வீதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட சென்றனர். 

அப்போது போலீசை பார்த்ததும் அந்த வீட்டில் இருந்த ஒரு ஆண் வெளியே தப்பி ஓடினார். பின்னர் போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 21 வயது மதிக்கத்தக்க பெண் பாலியல் தொழில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்தப் பெண்ணை விசாரித்த போது சண்முக வடிவு(60) என்பவர் தன்னிடம் ஆசை வார்த்தை பேசி என்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறினார். போலீஸ் விசாரணையில் சண்முக வடிவு பெண் புரோக்கராக செயல்பட்டு இதேபோன்று பல பெண்களை பாலியல் தொழில் தள்ளியது தெரியவந்தது.

பின்னர் இருவரையும் போலீசார் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாரிடம் அந்தப் பெண்தான் பனியன் கம்பெனியில் வேலை பார்த்த போது சண்முகவடிவுடன் அறிமுகம் ஆகி என்னிடம் ஆசை வார்த்தை கூறி என்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார் என்று கூறினார். இதனையடுத்து சண்முகவடிவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உறவினர்களை வரவழைத்து அந்தப் பெண்ணுக்கு புத்திமதி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் கோபி பகுதியில் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனக் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.