Skip to main content

எனக்கு கல்யாணம் என்றதும் கோபப்பட்டாள்... அதனாலத்தான்... வாலிபர் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்...

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

 


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது கிருஷ்ணன் பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி சிவகாமசுந்தரி. வயது 45. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தனியார் கம்பெனியில் வெளியூர்களில் வேலை பார்க்கிறார்கள். இவரது கணவர் பாலசுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிவகாமசுந்தரி தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 14ஆம் தேதி வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பலா மரத்தின் அடியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருக்கு அருகில் மது பாட்டில்கள், அட்டைப்பெட்டி சீட்டுகள் படுக்கையாக விடுக்கப்பட்ட நிலையில் கிடந்தன.

 

young man



 

சிவகாமசுந்தரி மர்மமான முறையில் கொலை செய்துள்ளனர் என்பதை கண்டுபிடிக்க கோரி அவ்வூர் மக்கள் சாலை மறியல் செய்தனர். குள்ளஞ்சாவடி போலீசார் தீவிர விசாரணை செய்து 26 வயதான வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்கிற ஜெகதீசன் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.

 

ஜெயசீலன் அளித்த வாக்குமூலத்தில், நான் வீடுகளுக்கு சுற்றிலும் பாதுகாப்புக்காக மூங்கில் வேலி அமைத்துத் தரும் வேலை செய்து வருகிறேன். அதன் காரணமாக சிவகாமசுந்தரி வீட்டுக்கு வேலி அமைத்துக் கொடுத்தேன். அப்போது சிவகாம சுந்தரி எனக்கு அறிமுகமானார். அடிக்கடி சந்தித்து பேசியதில் இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டோம். இரவு நேரத்தில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பலா மரத்தின் கீழே இருவரும் சந்தித்து உல்லாசமாக இருப்போம். இந்த நிலையில் எனக்கு வீட்டில் பெண் பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர்.


 

இதுசம்பந்தமாக நான் சிவகாமசுந்தரியிடம் போன் மூலம் தகவல் சொன்னேன். அவர் என்மீது கோபமாக இருந்தார். அந்த கோபத்தை தணிப்பதற்காக 14ஆம் தேதி இரவு வழக்கமாக சந்திக்கும் கரும்புத் தோட்டத்திற்கு வரச் சொன்னேன். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தபோது, திருமண விஷயத்தை கூறினேன். அதற்கு அவர் என்னை விட்டுவிட்டு வேறு திருமணமா என்று கோபப்பட்டார். அதனால் அவரை தாக்கினேன். அதில் அவர் இறந்து போனார். இறந்துபோனது அறிந்ததும் பயந்துபோய்  தலைமறைவாகி விட்டேன். ஆனால் என்னை போலீசார் எனது செல்போன் செயல்பாடுகள் மூலம் என்னை தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் வெறிச்செயல்; காதலியைக் கொன்று ஸ்டேட்டஸ் வைத்த காதலன் 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

boyfriend who incident his girlfriend and made a whatsapp status

 

காதலியைக் கொன்று தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்த காதலனின் செயல் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பவுசியா(20) என்ற நர்சிங் மாணவி சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். அதே கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக்(20) என்பவரும், பவுசியாவும் கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில், மாணவி பவுசியா கடந்த மூன்று நாட்களாகக் கல்லூரிக்குச் செல்லாமல் காதலன் ஆஷிக்குடன் வெளியே சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் நேற்று குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹோட்டல் அறையில் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த சண்டை முற்றவே ஆத்திரமடைந்த காதலன் ஆஷிக், பவுசியாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அதனை ஆஷிக் தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார். இந்த நிலையில் ஆஷிக்கின் ஸ்டேட்டஸை பார்த்து அதிர்ச்சியடைந்த பவுசியாவின் தோழி உடனடியாக குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹோட்டல் அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாகக் கிடந்த பவுசியாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் தப்பிக்க முயன்ற காதலன் ஆஷிக்கையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியன் கம்பியில் மோதி, கழ்விந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பெங்களூரில் இருந்து சென்னை மார்க்கமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார், மணல் ஏற்றிவந்த லாரி உரிமையாளர்கள் உதவியுடன் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். இந்த விபத்தில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.