Girl Child missing police investigation

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சபரியும் பள்ளி மாணவியும் சில மாதங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

Advertisment

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி விடியற்காலை 4 மணியளவில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் காணாமல் போனதாக கடந்த 18ஆம் தேதி அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அச்சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய குடும்பத்தினர் அம்பலூர் காவல் நிலையத்திற்கு வருகை தனது மகளை கண்டுபிடித்தீர்களா? என கேட்கும் பொழுது காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மாணவியின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசி சிறுமியின் சித்தப்பாவை தாக்கியுள்ளனர்.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மீண்டும் நேற்று மாலை அம்பலூர் காவல் நிலையம் முன்பு வந்து தங்களது மகளை கண்டுபிடித்து தரக் கூறியும், தங்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்த போது, சிறுமியின் தந்தை தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதன் காரணமாக அம்பலூர் காவல் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment