ரக

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய தளர்வுகளை அளிப்பது குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

Advertisment

இந்நிலையில் இதுதொடர்பாக தற்போது முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் பொதுமுடக்கம் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலையான வழிக்காட்டுதல்களின் கீழ்சுற்றுலா தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் உள் அரங்குகளில் 200 நபர்களுக்கு மிகாமல் அரசியல், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மருத்துவ மாணவர்களின் வகுப்புகள் வரும் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு பயிற்சிக்காக நீச்சல்குளங்களைத்திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment