
வணிக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலை திடீரென உயர்ந்துள்ளது.
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 203 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 157 ரூபாய் குறைந்த நிலையில் இந்த மாதம் 203 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் ரூபாய் 1,695 ரூபாய்க்கு விற்கப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை தற்போது 1,898 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.