Skip to main content

"எனக்கு இது தேவையாண்ணே''”  --கண்ணீர் விடும் கஞ்சா கருப்பு! 

Published on 29/09/2018 | Edited on 29/09/2018
Ganja Karuppu



சினிமா மார்க்கெட்டில் காமெடி ஃபீல்டில் ஓஹோ என இருந்தவர் கஞ்சா கருப்பு. இப்போது கடனாளியாகி, கொடுக்குற சம்பளத்தை வாங்கிக் கொள்ளும் நிலைமைக்குப் போய்விட்டதாக தகவல் கிடைத்ததும், கஞ்சா கருப்புவுடன் எப்போதும் இருக்கும் கவிஞர் ஜெயங்கொண்டான் மூலம் கருப்புவைத் தொடர்பு கொண்டோம். "வீட்டுக்கு வாங்கண்ணே வௌக்கமாப் பேசுவோம்'' என்றார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கஞ்சா கருப்புவின் "பாலா-அமீர்'’ இல்லத்திற்கு காலை 9 மணிக்குச் சென்றோம். 
 

 அப்போது காரில் இருந்து இறங்கியபடியே நம்மைப் பார்த்த கஞ்சா கருப்பு, “"மாங்காடு கோவிலுக்குப் போயி காமாட்சி ஆத்தாள கும்பிட்டு வர்றேண்ணே, இனிமே எல்லாத்தையும் அந்த தாயி பாத்துக்குவா. நீங்க கேக்க வேண்டிய கேள்விய கேளுங்க. அம்புட்டு உண்மையையும் சொல்லிப்புடுறேண்ணே'' என்றதும் பேட்டி ஆரம்பமானது. 
 

 போனமுறை பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனீங்களே, அந்த அனுபவம் எப்படி இருந்தது?
 

 அதெல்லாம் பெரிய படிப்பினைண்ணே. நல்லவுக யாரு, கெட்டவுக யாருன்னு தெரிஞ்சுக்கிட்டேன். பசியோட வேதனைய தெரிஞ்சுக்கிட்டேன். பெரிய ஜாம்பவான் கமல் அண்ணன்கூட நேருக்கு நேர் பேசும் வாய்ப்பும் கிடைச்சது. எல்லாத்துக்கும் காரணமான பிக்பாஸ்க்கு நன்றி. 
 

 கொஞ்ச நாளா உங்க படத்தையே காணோமே, இப்ப எப்படி இருக்கு உங்க மார்க்கெட்? 
 

 ஆண்டவன் புண்ணியத்துல நல்லா இருக்குண்ணே. "சண்டக்கோழி-2', "முடிச்சிருச்சு. அடுத்து "வெண்ணிலா கபடிக்குழு-2', "களவாணி-2', "பேரன்பு கொண்ட பெரியோர்களே'ன்னு அமீர் அண்ணன் டைரக்ஷன்ல ஒரு படம், இது போக நாலஞ்சு படத்துக்கு பேச்சுவார்த்தை முடியுற கண்டிஷன்ல இருக்கு. அதிலயும் ’சண்டக்கோழி-2’ படத்துல மக்கள் மனசுல நிக்குற மாதிரி எனக்கு வசனம் கொடுத்துருக்காரு லிங்குசாமி அண்ணன். தர்மதுரையில நடிச்சப்ப விஜய்சேதுபதி அண்ணன் என்னை ரொம்பவே பாராட்டுனாரு. இப்பக்கூட டைரக்டர் சீனுராமசாமி கிட்டே, ‘கஞ்சா கருப்பு நல்ல நடிகன், நல்ல மனிதன், கடின உழைப்பாளின்னு பாராட்டிருக்காரு விஜய் சேதுபதி. 
 

 ரஜினி கூட நடிக்கும் வாய்ப்பு வரலையா? 
 

"பேட்ட' படத்துக்கு வாய்ப்பு வந்துச்சு. அந்த நேரம் பார்த்து "சண்டக்கோழி-2'’ கால்ஷீட் டைட்டா இருந்ததால நம்மால முடியாமப் போச்சுண்ணே. 

 

velmurugan-borewell


 

  எல்லாம் சரி, நீங்க கடனில் தத்தளிப்பதா நியூஸ் வந்திருக்கே?
 

அம்புட்டும் உண்மைதாண்ணே. இதுல மறைக்கிறதுக்கு என்ன இருக்கு. "வேல்முருகன் போர்வெல்' அப்படின்னு ஒரு படத்தால் நான் பட்டபாடு இருக்கே. பாலா அண்ணனும் அமீர் அண்ணனும் அப்பவே சொன்னாக, டேய் சினிமாங்கிறது ஒரு பொக்கிஷம், அத பத்திரமா பாதுகாக்கணும். தயாரிப்புங்குறது ஈஸியான காரியமல்ல, ஆழம் தெரியாம காலை விடாதேன்னு சொன்னாக. என்னயப் புடிச்ச கெரகம் விடல, மாட்டிக்கிட்டேன். எனக்கு இது தேவையாண்ணே.  சினிமான்னா என்னன்னு தெரியாத கோபிங்குற ஒருத்தன் டைரக்டர்ங்கிற பேர்ல எமனா வந்து என் வாழ்க்கையில விளையாடிட்டான். இப்பவும் பெரிய டைரக்டர்கள் பேரச் சொல்லிக்கிட்டு, அவர்களிடம் அசிஸ்டெண்டா இருக்கேன்னு அள்ளிவிட்டுக்கிட்டிருக்கான். கோபி மாதிரி குடி கெடுப்பவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

 
அப்ப இனிமே சொந்தப்படம் எடுக்கமாட்டீகல்ல?
 

  இந்த ஜென்மத்துல மட்டுமல்ல, அடுத்த ஜென்மத்துல பாம்பா பொறந்தாக்கூட ஊர்ந்துக்கிட்டுத் தான் திரிவேனே ஒழிய படம் எடுக்க மாட்டேண்ணே
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"எடப்பாடி ஆட்சி அமைக்க தீச்சட்டி எடுக்க போறேன்" - கஞ்சா கருப்பு அதிரடி

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

ganja karuppu about edapaadi k palaniswamy

 

நடிகர் கஞ்சா கருப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணி அருகே கீழகொம்புக்காரனேந்தலில் உள்ள கந்தசாமி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் திருவிழா மற்றும் பால்குட விழாவில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமிக்காக தீச்சட்டி எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

 

அவர் பேசுகையில், "இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. அப்போதே வர வேண்டியது. படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை. அதனால் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டுள்ளேன். இதைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுக்க போகிறேன். எதுக்காகனா, எடப்பாடி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதுக்கும் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கும் தான். 

 

இது மட்டுமில்லை. கூடிய விரைவில் நல்ல ஆட்சி அமையும். உங்களுக்கு நேர்மையான ஆட்சி வரப்போகுது. முக்கியமாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். தப்பாக நினைத்து கொள்ளாதீர்கள். எடப்பாடி ஆட்சி அமைத்தார் என்றால் இன்று கரெண்ட் பில் எல்லாம் ஏறி இருக்காது. இன்றைக்கு அது பயங்கரமா ஏறிடுச்சு. வீட்டு வரி எல்லாம் அதிகரிச்சுடுச்சு. அதனால் நிச்சயம் எடப்பாடி ஆட்சி புரிவார்" என்றார். 

 

பின்பு ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, "எல்லாருமே சீக்கிரம் ஒன்றாக சேர போறாங்க. அனைவரும் நம்ம கட்சி ஆளுங்க தான். பங்காளிக்குள்ள சண்டை இருக்கும். அடிச்சிக்குவோம் பிடிச்சிக்குவோம். நாளைக்கு ஒன்றாக சேர்ந்துடுவோம்" என பதிலளித்தார்.  

 

 

Next Story

"பிக்பாஸ் பற்றி நான் எதுவும் சொல்லல... என்னை விட்ருங்க..." - கஞ்சா கருப்பு

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

கஞ்சா கருப்பு... பெயராலும் தனது வெகுளித்தனத்தாலும் முதல் படத்திலிருந்தே கவனிக்கப்பட்டவர். 'பிதாமகன்' படத்திலேயே சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் முக்கிய நகைச்சுவை நடிகராக 'ராம்' படத்தில்தான் முதலில் நடித்தார். ராமில் 'வாழவந்தான்', பருத்திவீரன் 'டக்ளஸ்', சுப்ரமணியபுரம் 'காசி', நாடோடிகள் 'மாரியப்பன்', களவாணி 'பஞ்சாயத்து' என இன்னும் நினைவு வைத்து சொல்லக்கூடிய பல பாத்திரங்களில் சிறப்பாக நடித்தவர். இடையே பட தயாரிப்பில் ஈடுபட்டு சூடுபட்டு சிறிய இடைவெளி ஏற்பட்டு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது மீண்டும் பிஸியாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு 2 படத்தின் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த அவரிடம் ஒரு சின்ன சாட் செய்தோம்...

 

vennila kabadi kuzhu



வெண்ணிலா கபடிக்குழு 2 ல எப்படி நீங்க இணைந்தீங்க?

வெண்ணிலா கபடிக்குழு முதல் பாகத்துல நான் கிடையாது. ஆனா, ரெண்டுல நான் இருக்கணும்னு கேட்டாங்க. படத்துல ஹீரோவை மதுரைக்கு பஸ் ஏத்தி விடுறதே நான்தான். அவரு மெட்ராஸுக்குப் போறாருன்னு எல்லோரும் நினைப்பாங்க. ஆனா, கபடி களத்துக்காக மதுரைக்குப் போவாரு. அண்ணன் பசுபதி என்னை கேப்பாரு, "டேய், அவன் மெட்ராசுக்கு போகலையாம்டா, எங்க ஏத்தி விட்ட?"னு. அப்படி ஒரு நல்ல குணச்சித்திரம் கலந்த கேரக்டர் எனக்கு. விக்ராந்த் தம்பி நல்லா ஓடுற குதிரை. அதுல நிறைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஏறி பயணம் செய்யணும். அவருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்னு வேண்டிக்கிறேன்.


தற்போது வேறு என்னென்ன படங்கள் நடிக்கிறீங்க?

களவாணி2 இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு. இன்னும் பேர் கொண்ட பெரியவர்களே, எம்.சி.ஆர்.பாண்டினு சில படங்கள் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அடுத்தடுத்து நிறைய படங்கள் நடிக்கப் போகிறேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக பட வாய்ப்புகள் வந்திருக்கா?

அப்படியில்ல.. நல்ல நடிகனுக்கு எந்த வேடம் கொடுத்தாலும் இவன் தாங்குவான் என்ற நம்பிக்கையை கொடுக்கணும். களவாணி இப்போ நல்லா ஓடுது, அதுனால எனக்கு நூறு படம் வரும். வெண்ணிலா கபடிக்குழு மூலமா இருபது படம் வரும். படத்துல நாம இருக்குறத பார்த்துதான் படம் கிடைக்குமே தவிர பிக்பாஸ்ல இருந்ததைப் பார்த்து மட்டுமெல்லாம் படம் வராது. அப்படி எதுவும் வரல.

தற்போது நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பாக்குறீங்களா, அது எப்படி போகுது?

இப்போ நடக்குற பிக்பாஸ் பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல விரும்பல. நான் கருத்து கந்தசாமி கிடையாது. என்னை விட்ருங்க...