/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maramni.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது S.குளத்தூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் மகன் குமரவேல். இவருக்கு அதே கிராமத்தில் ஐந்து ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இவருடைய விவசாய நிலத்தில் தென்னைமரம், பலாமரம், வாழை மரம், கொய்யா மரம் ஆகிய மரங்களும் உள்ளன.
இந்நிலையில், குமரவேல் தன்னுடைய உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளார். இதனை சாதுரியமாக நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், குமரவேல் ஊரில் இல்லாத சமயம் பார்த்து இவரது விவசாய நிலத்திற்கு சென்று இரவோடு இரவாக தென்னை மரத்தில் ஏறி இளநீரை பறித்து சத்தம் கேட்காதவாறு அதனை கயிறு மூலம் கீழே இறக்கி வெட்டி மகிழ்ச்சியுடன் குடித்துள்ளனர்.
இதனையடுத்து, நில உரிமையாளர் குமரவேல் இன்று (12-06-24) அதிகாலை தன்னுடைய விவசாய நிலத்தை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது தென்னை மரத்தில் இருந்த இளநீர் திருடுபோய் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, புளிய மரத்தின் அருகில் கால்நடை கட்ட சென்ற குமரவேல் புளிய மரத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். அங்கு, நீல நிறத்தில் சார்ட் அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை பார்த்து பெருமூச்சுட்டுள்ளார் அந்தச் சாட் அட்டையில், ‘இது எங்களுடைய 128 - வது இளநீர் வேட்டை. முக்கிய குறிப்பு; தீர விசாரிக்காதீர்கள் இதுவே இறுதியாகட்டும் மீறி விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி!!!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/namamni.jpg)
இப்படிக்கு “ஓம் சக்தி ஆதிபராசக்தி, ஸோசோத்திரம் ஆண்டவரே, லு.கா82 வது அதிகாரம் , எல்லாப் புகயும் இறைவனுக்கே அல்லா”. மேலும் வேண்டுகோள்; செவ்விளநீர் மரங்களை வளர்க்கவும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அதில், ‘எச்சரிக்கை:-எங்களை கண்டுபிடிக்க இயலாது’ எனக் குறிப்பிட்டு பெரிய நாமத்தைப் போட்டுவிட்டு நகரம் படம் வடிவேல் பாணியில் நூதனமுறையில் திருடி இளநீரை வேட்டையாடி குடித்துவிட்டு அங்கிருந்து மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றுள்ளனர். யார் இந்த வேலையை பார்த்திருப்பார்கள் என தெரியாமல் கிராமமே திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)