Skip to main content

கர்நாடகாவில் முழு அடைப்பு; தமிழக டிஜிபி முக்கிய அறிவுறுத்தல்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Full lockdown in Karnataka; Tamilnadu DGP Important Instruction

 

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகக் கர்நாடகாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக போலீஸ் டிஜிபி முக்கிய அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

 

இது குறித்து தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டுக்கு காவிரி நதி நீர் தர உத்தரவு பிறப்பித்ததின் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பல்வேறு கன்னட அமைப்புகள் செப்டம்பர் 29 ஆம் தேதி 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது. இது சம்பந்தமாக கர்நாடக மாநில எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பயணிகள் பேருந்து போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்பாக உள்ளூர் நிலைமைக்கேற்ப கர்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனைச் சாவடிகளிலும் உயர் அதிகாரிகளின் தலைமையில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் இதர சந்தேகங்களை பொதுமக்கள் நிவர்த்தி செய்துகொள்ள தொடர்பு அலுவலகமாக கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் செயல்படும். பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண்கள் 9498170430, 9498215407” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்; தேர்தல் ஆணையம் அதிரடி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Telangana DGP suspended; The Election Commission is in action

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 63 இடங்களையும், பிஆர்எஸ் 40 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், பிற கட்சியினர் 8 இடங்களையும் பிடித்துள்ளனர்.

 

இந்த சூழலில் தெலங்கானா மாநில போலீஸ் டிஜிபி அஞ்சனிகுமார், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்கு முன்பாகவே தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டியை சந்தித்தாகக் கூறி தெலங்கானா போலீஸ் டிஜிபி அஞ்சனிகுமாரை சஸ்பெண்ட் செய்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Chance of rain with thunder and lightning in Chennai

 

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (01.12.2023) காலை 10 மணி வரை  மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்