Skip to main content

“தமிழகத்திலேயே முதன்முறையாக ‘நூலக நண்பர்கள்’ திட்டம் தொடக்கம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

Friends of the Library project started for the first time in Tamil Nadu

 

தமிழகப் பொது நூலகத்துறை மூலமாக நூலக நண்பர்கள் திட்டம் திண்டுக்கல்லில் நேற்று துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தினை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

 

திட்டத்தின் நோக்கமே அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். திட்டத் தொடக்க விழாவில் உணவுத்துறை அமைச்சர் அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் விசாகன், பழனி எம்எல்ஏ செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத், கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். துவக்க விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ள 350 தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கைப்பை வழங்கப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல்லில் நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்தத் திட்டத்திற்காக ரூ. 56.25 லட்சம் செலவு செய்ய உள்ளோம். செலவு எனச் சொல்வதை விட அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான முதலீடு என்றுதான் சொல்ல வேண்டும்.  12,500 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

 

இந்தத் திட்டத்தில் 15 லட்சம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க உள்ளோம். ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் 25 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. அவர்கள் மூலம் குழந்தைகள், வயதானவர்கள், குடும்பப் பெண்கள் பயனடைவார்கள். வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஊர்ப்புற நூலகர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலுக்கு பிறகு 100 நாள் வேலைக்கு ரூபாய் 400 ஊதியம் கிடைக்க வழி செய்யப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 After election, a way will be made to get Rs 400 wages for 100 days of work says Minister I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள சிபிஎம் கட்சியின் வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய  செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற தலைவர் உலகநாதன் வரவேற்றார். ஒன்றியபெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்டகவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிள்ளையார் நத்தத்திற்கு வாக்குகள் சேகரிக்க வந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கும் கிராம மக்கள்பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்

 After election, a way will be made to get Rs 400 wages for 100 days of work says Minister I. Periyasamy

அதன்பின்னர் வாக்காள மக்கள் மத்தியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, கிராமங்களில் வறுமையை ஒழித்தது நூறு நாள்வேலை திட்டம் தான். நூறுநாள் வேலை திட்டம் மூலம் வறுமையை மட்டுமின்றி வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசு மீண்டும் வந்தால் நூறுநாள் வேலை திட்டத்தை முற்றிலும் ஒழித்துவிடும். அதன் பின்னர் எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும்தான் இருக்கும். இந்த நிலைமை வராமல் இருக்க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிபிஎம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களித்து அவரை  அமோக வெற்றியை பெறச் செய்ய வேண்டும்.

கடந்த வருடம் நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த 110பேருக்கு ஒரு பைசா செலவில்லாமல் கூட்டுறவுத்துறையில் ரேசன்கடை பணியாளர்களாக பணியமர்த்தினேன். இதுபோல ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் அனைவருக்கும் கல்விக்கட்டணம் வழங்கியதோடு தேர்வு கட்டணமும் வழங்கியதால் ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராமப்புற ஏழைகளின் சிரமங்கள் குறைந்தது. தேர்தலுக்கு பிறகு நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகள் அனைவருக்கும் ரூ.400 ஊதியமாக கிடைக்க வழி செய்யப்படும் என்று கூறினார்.

 After election, a way will be made to get Rs 400 wages for 100 days of work says Minister I. Periyasamy

அதனை தொடர்ந்து செட்டியாபட்டி, காந்திகிராமம் ஊராட்சிக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த பின்பு தொப்பம்பட்டி ஊராட்சிக்கு வந்த போது தொப்பம்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி மற்றும் அருந்ததியர் காலனியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களையும் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களையும் வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இங்குள்ள மக்கள் தங்களுக்கு வீடு வசதி வேண்டுமேன கோரிக்கை விடுத்துள்ளனர். நான் ஒன்றை மட்டும் அவர்களுக்கு சொல்கிறேன். தேர்தல் முடிந்தபின்பு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தாள் அன்று தொடங்கப்பட உள்ள கலைஞரின் கணவு இல்ல திட்ட மூலம் அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். இதற்காக தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  ரூ.35ஆயிரம் கோடியை நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வருடத்திற்கு ஒருலட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

கடந்த10 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது திண்டுக்கல் மாவட்டம் 100 நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது வாங்கியது. தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு நூறு நாள் திட்டத்தை முடக்கும் வண்ணம் 1 லட்சம் கோடிநிதி வழங்குவதற்கு பதிலாக 60 ஆயிரம் கோடியை மட்டும் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் நூறுநாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கூலியாக வழங்கியுள்ளது. பாக்கியுள்ள 40 ஆயிரம் கோடியை வழங்கினால்தான் நூறு நாள் வேலை திட்டபயனாளிகளுக்கு முழுமையான கூலி வழங்க முடியும். இதை மத்தியில் ஆளும் பாஜகஅரசு வழங்க மறுப்பதோடு நூறுநாள் வேலை திட்டத்தையும் முடக்க நினைக்கிறது. உங்களுக்கு நூறு நாள் வேலை திட்டம் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களித்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நூறு நாள் வேலை திட்டமும் தொடர்ந்து கிடைக்கும்” என்றார்.

 After election, a way will be made to get Rs 400 wages for 100 days of work says Minister I. Periyasamy

பஞ்சம்பட்டி பாஸ்கா மைதானம் முன்பு பிரச்சாரம் செய்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு வேட்பாளருடன் சென்று டீ குடித்ததோடு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Next Story

ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ அறிமுக கூட்டம்!

Published on 21/03/2024 | Edited on 22/03/2024
MDMK candidate Durai Vaiko's introductory meeting

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி தெற்கு  மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ம.தி.மு.க வேட்பாளர் துரை.வைகோ தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஆதரவு கோரி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், மாவட்டக் கழகச் துணை செயலாளர் செங்குட்டுவன், ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், கு.சின்னப்பா, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள் மு. இராஜேந்திரன், ரொஹையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.