
திருவள்ளூர் மாவட்டத்தில் 24 வயதுடைய உடற்பயிற்சியாளர் வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரை சேர்ந்தவர் அஜித். 24 வயதான இவர் பல மாதங்களாக ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக ஜிம் செல்லாமல் அஜித் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த அஜித்திற்கு லேசாக மார்பில் வலி இருந்துள்ளது. உடனடியாக அவர் குடும்பத்தினரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். எனினும் அஜித் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார். முதலில் லேசாக ஏற்பட்ட மாரடைப்பு மீண்டும் ஏற்பட்டதால் அஜித் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்கள் முன்பும் ஆவடியில் ஜிம் பயிற்சியாளராக இருந்தவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களே குறிப்பிட்ட இடைவெளியில் உயிரிழந்துள்ள செய்திகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.