/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks4434_33.jpg)
பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்பாகசென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அமைச்சர்கள் மற்றும்துறைசார்ந்த உயரதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பு குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாகத்தகவல்கள்கூறுகின்றன. பொங்கல் தொகுப்பு வழங்கலாமா? அல்லது பணமாக வழங்கலாமா? என்பதுகுறித்தும்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனைக்குப் பிறகு இலவச வேட்டி, சேலை மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)