/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4548.jpg)
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நாத்தம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 505 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகள் 89 மாணவ மாணவிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கலந்துகொண்டு ஒரு சில பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சென்றார். அதன் பின்னர் மிதிவண்டிகள் மிகவும் பழுதடைந்து இருந்ததாகத்தெரிகிறது. இதன் காரணமாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோகரன் புதிய ஐடியா கண்டுபிடித்து மிதிவண்டியில் எண்களை எழுதியும் அதே எண்களை பேப்பரில்எழுதியும் ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு குலுக்கல் முறையில் பள்ளி மாணவ மாணவிகளை எடுக்கக் கூறி அதன் பின்னர் மிதிவண்டிகளைக் கொடுத்து அனுப்பினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1763.jpg)
இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபொழுது, மிதிவண்டிகள் பழுதடைந்துள்ளது. இதை நாம் கொடுத்தால் தலைமையாசிரியர் பழுதடைந்த மிதிவண்டிகளை தனக்கு கொடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டுவார்கள். அதன் காரணமாக இதுபோல் புதிய ஐடியாவை கண்டுபிடித்து கொடுத்ததால் யாரும் தன்னைக் குறை கூறமாட்டார்கள் எனக் கூறினார். 57மாணவிகளுக்கும் 32மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)