Skip to main content

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த தினம்; முதல்வர் மரியாதை

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Former Union Minister Murasoli Maran's birthday Respect to the Chief Minister

 

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்குத் தமிழக முதல்வர் மரியாதை செலுத்தினார்.

 

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுக்கிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுரை மாவட்டம் சிலைமான் அருகே அமைந்துள்ள அண்ணா மண்டபத்தில் முரசொலி மாறன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,  மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்களை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்  அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

 

முன்னதாகச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைந்திருக்கும் முரசொலி மாறன் சிலைக்கு மாலை அணிவித்து அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவல்துறையின் அலட்சியம்! நீதிக்காக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வந்த பெண்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 The woman came to the chief minister's special unit for justice

பொள்ளாச்சி டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பாகனாக பணியாற்றிவந்த ராஜ்குமார், கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி சேத்துமடை செக்போஸ்ட் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக அவரது மனைவி மஞ்சு, ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அங்கிருந்த காவலர்கள் இவரின் புகார் மீது விசாரணை நடத்தாமல் இழுத்தடித்துள்ளனர். இதனால், கணவனை இழந்து வேதனையில் இருந்துவந்த மஞ்சு நேற்று (21ம் தேதி) சென்னைக்கு வந்து, முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார். 

அந்த மனுவில் அவர், “பொள்ளாச்சி தாலுகா டாப்ஸ்லிப் கோழி கமுத்தி செட்டில்மண்ட் யானைகள் முகாமில் 15 வருடங்களாக என் கணவர் S. ராஜ்குமார் யானை பாகனாக பணியாற்றிவந்தார். கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதியன்று, அவருடன் பணியாற்றி வந்த மற்றொரு யானை பாகனான சந்திரன் என்பவர், ‘வனத்துறை அதிகாரி அழைத்து வர சொன்னார்’ என காலை 10 மணி அளவில், எனது கணவரை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றார். 

 The woman came to the chief minister's special unit for justice

சந்திரனுடன் சென்ற எனது கணவர் ராஜ்குமார், மூன்று நாட்களாக வீடு திரும்பவில்லை. இந்நிலையில், டிசம்பர் மாதம் 5ம் தேதி மாயத்துரை என்ற வனத்துறை அதிகாரி, எனது மாமியார் தங்கத்தை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, ‘உங்களது மகன் ராஜ்குமார் சேத்துமடை செக்போஸ்டில் இருக்கிறார். வாருங்கள்’ என்று தகவல் கொடுத்தார். அந்தத் தகவலின் பேரில் நாங்கள் அங்கு விரைந்து சென்றோம். நாங்கள் அங்கு சென்று பார்த்த போது, சேத்துமடை செக் போஸ்ட்டிற்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில், ஆர்.டி.ஓ. மற்றும் வனத்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ், திரளான பொது மக்களும் அங்கு திரண்டு இருந்தனர். 

இவர்களை எல்லாம் பார்த்த பொழுது எங்களுக்கு மிகவும் பயம் வந்து விட்டது. அதன் பிறகு என்னுடைய கணவர் ராஜ்குமார் மர்மமான முறையில், அழுகிய நிலையில் அங்கு பிணமாக கிடந்தார். பிறகு உடலை அங்கிருந்து போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு, மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். எங்களுக்கு தெரிந்த சிலரிடம் விசாரித்த போது, ‘டாப் ஸ்லிப்பில் இருந்து, வேனில் சந்திரன், விஜயன், அருண், வெங்கடேசன் ஆகிய நால்வரும் தான் உன் கணவர் ராஜ்குமாரை அழைத்துச் சென்றனர்’ என்று கூறினர். ஆனால் காவல்துறை, மேலே குறிப்பிட்டுள்ள நால்வரை விசாரணை செய்ததாக தெரியவில்லை. எனவே நாங்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் என் கணவர் ராஜ்குமார் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று புகார் தெரிவித்தோம். புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு நியாயமான முறையில் விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, நீதியை நிலை நிறுத்த வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

ராமர் பாண்டி கொலை வழக்கு; ஐந்து பேர் சரண்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Ram Pandi  case; Five people are Saran

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ரவுடி ராமர் பாண்டி என்பவர் கரூரில் தலை சிதைந்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய கொலைக்குப் பழிக்குப் பழியாக ராமர் பாண்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கடந்த 2012 ஆம் ஆண்டு பசும்பொன் தேவர் ஜெயந்தி முடித்துவிட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் வீசிய சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் உயிரிழந்தனர். அதில் ரவுடி ராமர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்காக சென்றுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராமர் பாண்டி மீது மர்ம நபர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி தலையைச் சிதைத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் தற்போது சரணடைந்துள்ளனர்.

மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், பூவந்தி பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார், மேலூர் பகுதியைச் சேர்ந்த பாரதி, தனுஷ் மற்றும் தர்மா ஆகிய ஐந்து நபர்கள் கொலை வழக்கு சம்பந்தமாக சரணடைந்துள்ளனர்.