Skip to main content

ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் மறைவு; தமிழக முதல்வர் இரங்கல்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் மறைவு; தமிழக முதல்வர் இரங்கல்

 

இந்திய ரிசர்வ் வங்கியின் 18-வது ஆளுநராக இருந்தவர் எஸ்.வெங்கிடரமணன் (92). நாகர்கோவில் மாவட்டத்தில் பிறந்த இவர் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 1989ஆம் வரை நிதியமைச்சகத்தின் நிதி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இதனை தொடர்ந்து, இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 1992 என இரண்டு காலம் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள் இருக்கின்றனர். இதில் ஒருவர் தான் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். 

 

நாட்டின் நெருக்கடி காலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றிய வெங்கடரமணன் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது சேவை என்றும் மறக்கமுடியாது என்று பல்வேறு பொருளாதார அறிஞர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெங்கிடரமணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர், ‘ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், நிதித்துறை செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர் வெங்கிடரமணன். இன்று அவர் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு, அவரது மகளும், முன்னாள் தலைமை செயலாளராகவும் இருந்த கிரிஜா வைத்தியநாதனுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விக்கிரவாண்டியில் திமுக முன்னிலை; இனிப்புகள் வழங்கி கொண்டாடிய முதல்வர்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
 mk stalin  celebrated DMK lead in the Vikravandi by-election

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் 69,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 30,421 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 5,566 வாக்குகளும் பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கிட்டத்தட்ட திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

Next Story

விளையாட்டு வீராங்கனைகளுக்குக் காசோலைகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி!

Published on 11/07/2024 | Edited on 12/07/2024
Minister Udhayanidhi gave checks to sport swomen

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நவம்பர் 10 முதல் 17 வரை உலக கேரம் போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் சார்பில் கே.நாகஜோதி, எம்.காசிமா, வி.மித்ரா என மூன்று கேரம் விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள 3 விளையாட்டு வீராங்கனைகளுக்கும், பயிற்றுநர் மரியா இருதயத்திற்கும் செலவீனத் தொகையாக தலா ரூ.1.50 லட்சத்திற்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் நியூசிலாந்தில் ஜூலை 16 முதல் 19 வரை நடைபெற உள்ள ஜூனியர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள ஜாய்ஸ் அஷிதாவுக்கு செலவீனத் தொகையாக ரூ.2.00 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விளையாட்டு வீரர்கள் சாதிக்க, வறுமை தடையாகக் கூடாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நோக்கம். அந்தத் தடையை நீக்க, தொடங்கப்பட்டதே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பிறருக்கு உதவவும், உதவிகளைப் பெறவும் இந்த இணைப்பில் சென்று தகவல்களை அறியலாம்: https://tnchampions.sdat.in/home” எனத் தெரிவித்துள்ளார்.