/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/perarivalan (1).jpg)
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாள் விடுப்பு வழங்கக்கோரி அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madras5633_24.jpg)
இந்த வழக்கு இன்று (24/09/2020) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர். அதேபோல், நீதிமன்ற உத்தரவு பெற்ற ஒரு வாரத்தில் பேரறிவாளனை விடுப்பில் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
பரோல் மனுவை தமிழக அரசும், சிறை துறையும் நிராகரித்த நிலையில் 30 நாள் உயர்நீதிமன்றம் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)