முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 8 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகத் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஆதரவாளர்கள் பெயர்களில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாகப் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டர் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி இமயவரம்பன் நேற்று அக்டோபர் 17ம் தேதி விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி ஆகியோர் பெயரில் வழக்குப் பதிவு செய்து இன்று காலை சென்னை முதல் புதுக்கோட்டை வரை 50 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் 32, சென்னை 8, திருச்சி 4, கோவை 2, செங்கல்பட்டு 2, காஞ்சிபுரம் 1, மதுரை 1 என 50 இடங்களில் சோதனை நடந்தது. மாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் விஜயபாஸ்கர் சம்பந்தமான பல ஆவணங்கள் சிக்கியுள்ள நிலையில் இலுப்பூரில் விஜயபாஸ்கரின் வீட்டில் தொடர்ந்து நடந்த சோதனையில் சுமார் 4 கிலோ 800 கிராம் தங்கம், 23.85 லட்சம் பணம், 3 கிலோ 750 கிராம் வெள்ளி மற்றும் வாகனங்களின் பதிவுச் சான்றுகள், பல ஆவணங்களும் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.