/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/minister3222.jpg)
எம்.ஜி.ஆர்ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.ஆர்.ராதா, உடல்நலக் குறைவால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று (08/12/2020) அவர் காலமானார். அவருக்கு வயது 86.
எஸ்.ஆர்.ராதா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். இவர், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் மறைவுக்குத்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)