/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kk-selvam-mks-art.jpg)
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளருமான கு.க.செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (03-01-24) காலமானார். மறைந்த கு.க.செல்வம் கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பின்பு, கடந்த 2021 ஆம் ஆண்டில் திமுக மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க.வில் இணைந்த கு.க.செல்வம், 2022 ஆம் ஆண்டு மீண்டும் திமுகவில் இணைந்தார். அதன் பின்பு, அவர் திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த சூழலில் உடல்நலக்குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கு.க.செல்வம் இன்று (03-01-2024) இன்று சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.
இந்நிலையில், மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கு.க. செல்வம் இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் த. வேலு, ஜெ. கருணாநிதி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத் தலைவர் காஜா முகைதீன், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், அன்பகம் கலை எனப் பலரும் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)