former cm jayalalitha memorial visit admk leaders

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று(22/01/2021) காலை 10.00 மணியளவில்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இருவரும் ஆலோசனை நடத்தினர்.

Advertisment

ஒருமணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா விடுதலை, ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, தமிழக சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆலோசனை செய்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

Advertisment

former cm jayalalitha memorial visit admk leaders

கூட்டத்திற்குப் பின்னர் சென்னை மெரினாவிற்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் நினைவிடக் கட்டுமான பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisment

former cm jayalalitha memorial visit admk leaders

ஜனவரி 27- ஆம் தேதி சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தமிழக முதல்வர் திறந்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.