Skip to main content

வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் சோதனை; நேரில் அஞ்சலி செலுத்தவிருக்கும் ஆளுநர்?

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

Forensic search at Vani Jayaram's house; Governor to pay tribute in person?

 

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது உடலானது ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேதப் பரிசோதனையானது தொடங்கியுள்ளது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் உடலானது நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது. அதன் பின்னராக நாளை மதியம் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாணி ஜெயராம் இறப்பு குறித்து சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், சுமார் 20 நிமிடம் அவரது வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

 

அண்மையில் மத்திய அரசின் பத்மபூஷன் விருதை அவர் பெற்றிருந்தார். இந்தநிலையில் அவர் உயிரிழந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநர் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நடிகைக்காக ரசிகரைக் கொன்ற நடிகர்; சினிமாவை மிஞ்சும் ரியல் சம்பவம் - கதிகலங்கும் திரையுலகம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Shocking information in Darshan Pavithra Gowda Renuka Swamy case

கடந்த ஜூன் 9 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள காமாட்சி பாளையா என்ற பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் சித்துரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சாமி என்றும் அவர் மருந்தகத்தில் பணியாற்றி வந்தார் என்று தெரியவந்தது.   

இதனைத் தொடர்ந்து ரேணுகா சாமியிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகாறாறு காரணமாக தாங்கள்தான் கொலை செய்தோம் என்று 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு அவரது தோழியுமான நடிகையுமான பவித்ரா கௌடாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.   

நடிகர் தர்ஷனுக்கு ஏற்கெனவே விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். ஆனால் தர்ஷன் தன்னை மிரட்டி அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி அவரை விட்டுப் பிரிந்துசென்றுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே சமயம் நடிகையும், மாடலுமான பவித்ரா கௌடாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து ஏற்பட்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தர்ஷனுக்கும், பவித்ரா கௌடாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணம் செய்து கொள்ளாமல் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துவந்துள்ளனர். தர்ஷனின் ரசிகரான ரேணுகா சாமி தர்ஷனும் - விஜயலட்சுமியும் பிரிந்ததற்கு பவித்ராதான் காரணம் என்று பவித்ராவின் இன்ஸ்டாகிரமில் ஆபாசமாகப் பேசி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் பவித்ரா பிரிந்து சென்றால்தான் தர்ஷனும், விஜயலட்சுமியும் ஒன்றாக வாழ்வார்கள் எனக் கடுமையான வார்த்தைகளில் பேசி ஆபாசப் படங்களையும் குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறாராம். 

Shocking information in Darshan Pavithra Gowda Renuka Swamy case

இதனைப் பவித்ரா தர்ஷனிடம் சொல்ல, தனது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடத்தி வரச் சொல்லியிருக்கிறார். அதன்பேரில் அவரது ஆட்கள் தர்ஷனின் நெருங்கிய நண்பரான வினய் குமாரின் வீட்டிற்குக் கடத்தி வந்துள்ளனர். பின்னர் அங்கு வந்த தர்ஷனும், பவித்ராவும் தங்களது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடுமையாகத் தக்கியுள்ளனர். அதில் ரேணுகா சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தர்ஷன் - பவித்ரா இருவரின் உத்தரவின் பேரிலேயே இந்தக் கொலை அரங்கேறி இருப்பதாக போலீஸில் சரண் அடைந்தவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் ரேணுகா சாமி உடல் கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது வினய் குமாரின் காரில் இருந்து ரேணுகா சாமியின் உடல் வீசப்படுவது பதிவாகியுள்ளது. மேலும் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு தர்ஷனும் பவித்ராவும் காரில் வந்துள்ளதையும், இருவரது செல்போன் சிக்னல் அதே இடத்தில் இருந்ததையும் உறுதி செய்த போலீசார் தர்ஷன், பவித்ரா உட்பட 10 பேரைக் கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். மறுபுறம் தர்ஷனின் ரசிகர்கள் போலீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரேணுகா சாமியின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில், தர்ஷன், பவித்ரா மற்றும் அவரது ஆட்கள் ரேணுகாசாமி மீது மின்சாரத்தை செலுத்தி கொடூரமாகக் கொன்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நடிகை ரம்யா, நடிகர் கிச்சா சுதிப் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ரேணுகா சாமிக்கு நீதிவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

Next Story

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
Famous playback singer Uma Ramanan passed away

பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் (69) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்..’ என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடிக்க, 1981 ஆம் ஆண்டில் வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தி உமா ரணமன் குரலில் இடம்பெற்ற “ஆனந்த ராகம் கேட்கும் நேரம்” பாடல் இன்றளவும் பலரின் கவத்தை பெற்று வருகிறது.

மூடுபனி, கர்ஜனை என இளையராஜாவின் இசையில் தொடர்ந்து பல பாடல்களை பாடியுள்ளார். மேலும்,  எம்.எஸ். விஸ்வநாதன், டி.ராஜேந்தர், தேவா, சிற்பி, வித்யாசாகர், மணி ஷர்மா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்களின் இசையில் உமா ரமணன் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார்.

இந்த நிலையில் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள இல்லத்தில் கணவருடன் உமா ரமணன் வசித்து வந்தார். சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த உமா ரமணன் நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.