Forced marriage of 15 girls- Tragedy of running in front of a train

Advertisment

ராணிப்பேட்டை அருகே திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் 15 சிறுமி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய 15 வயது சிறுமியான மகளுக்கு 25 வயதான பொன்னுரங்கம் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த திருமணத்தில் சிறுமிக்கு சம்மதம் இல்லாத நிலையில் தொடர்ந்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில்வீட்டில் இருந்து தப்பிவந்த சிறுமி வாலாஜா பகுதியில் தண்டவாளத்தில் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.

சிறுமியின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கும் நிலையில் சிறுமியின் பெற்றோர் மீது இருப்புப் பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.