
மேட்டூர் அணையிலிருந்து 2 லட்ச கன அடிக்கும் அதிகமான உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மயிலாடுதுறை, சீர்காழி அருகே கொள்ளிடம், நாதல்படுகை முதலை மேடு திட்டு, அளக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சொந்த வீட்டிற்கு செல்ல முடியாத நிலையில் நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளவரசன் மனைவி சிவரஞ்சனிக்கு கொள்ளிடம் ஆற்றின் கரையிலேயே வளைகாப்பு விழா நடைபெற்றது. ஆற்றங்கரை ஓரம் பொதுமக்கள் தங்குவதற்காக போடப்பட்டுள்ள பந்தலில் சிவரஞ்சனிக்கு சிறப்பாக வளைகாப்பு விழா நடத்தினர். முகாமில் தங்கி இருந்த அனைத்து பெண்களும் சிவரஞ்சனியை சந்தனம் குங்குமம் வைத்து வாழ்த்திச் சென்றனர்.