
'நிவர்' புயலால் கடலூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் சேதங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது கடலூரில் வெள்ளத்தில் சிக்கி 9,000 வாத்துகளும், 5,000 கோழிகளும்உயிரிழந்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவு நிவர் புயல் கரையைக் கடந்த சமயத்தில், பலத்த காற்றுடன்கன மழையும் பொழிந்தது. கனமழை காரணமாகக் கடலூரில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவத்தானூர்ஏரியில் வைக்கப்பட்டிருந்த, காசி என்பவருக்குச் சொந்தமான 3,000 வாத்துகளும்,அதேபோல் அதே பகுதியில் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான 6,000 வாத்துகளும், மணப்பாக்கம் பகுதியில் குப்பன் என்பவருக்குச் சொந்தமான 5,000 கோழிகளும் நீரில் அடித்துச் சென்று இறந்துள்ளது. மழை வெள்ளத்தில் கோழிகளும், வாத்துகளும் இறந்து மிதக்கின்றகாட்சிகளைப் பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது.
இந்த அளவிற்குக் கனமழை வரும் என எதிர்பார்க்கவில்லை.அதேபோல், ஏரி சில மணி நேரத்தில் நிரம்பிவிடும் எனவும் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என வாத்து,கோழிகளின் உரிமையாளர்களானவிவசாயிகள், வருத்தத்துடன் தெரிவித்தனர். இதனால், 10 லட்சம் மதிப்புடைய வாத்துகள் இறந்திருப்பதால், இதற்குத் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்கோரிக்கை வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)