Skip to main content

மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தனர்!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

fishermans chennai airport minister jayakumar

 

 

காணாமல் போய் மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்கள் 8 பேர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். 

 

சென்னை துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆகஸ்ட் 7- ஆம் தேதி காணாமல் போனார்கள். மீனவர்கள் பாபுவை தவிர மற்ற 8 பேர் மியான்மரில் தஞ்சம் அடைந்ததை அறிந்து அவர்களை மீட்டு வந்தது தமிழக அரசு.

 

டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த மீனவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் அமைச்சர் ஜெயக்குமார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், மீனவர் பாபுவை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Air fares hike Passengers shocked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

Next Story

ராமேஸ்வரம் வரும் பிரதமர்; தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு?

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
TN fishermen released from Sri Lankan prisons when Modi comes to Rameswaram

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நேற்று (19.01.2024) முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சி முடிவடைந்ததும் இரவு ஆளுநர் மாளிகையில் தங்கிய பிரதமர், இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். இதற்காக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் செல்லவுள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் புனித நீராடி அங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் பாதுகாப்பு கருதி பக்தர்கள், போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதையொட்டி, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணம் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.