Skip to main content

கொல்லப்பட்டி பட்டாசு குடோன் விபத்து; உயிரிழப்பு 6 ஆக அதிகரிப்பு

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

Fireworks godown Incident; Casualties rise to 6

 

சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

 

சேலம் இரும்பாலை பகுதியில் இருக்கக்கூடிய சர்க்கார் கொல்லப்பட்டியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கனூர் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் அன்று மாலை 4:30 மணியளவில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தில் படுகாயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே குடோன் உரிமையாளர் சதீஷ்குமார், கடையில் பணியாற்றி வந்த நடேசன், மற்றும் பானுமதி என மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

இந்த நிலையில் நேற்றிலிருந்து ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வருகின்றனர். பிரபாகரன், மோகனா, மகேஸ்வரி, வசந்தா, மணிமேகலை உள்ளிட்ட ஆறு பேர் பயங்கரமான தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆறு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் உயிரிழந்தார். தொடர்ந்து மோகனா உயிரிழந்தார். இந்நிலையில் ஆலையின் பங்குதாரர்களில் ஒருவரான மகேஸ்வரி உயிரிழந்துள்ளார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியன் கம்பியில் மோதி, கழ்விந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பெங்களூரில் இருந்து சென்னை மார்க்கமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார், மணல் ஏற்றிவந்த லாரி உரிமையாளர்கள் உதவியுடன் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். இந்த விபத்தில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

செல்போனுக்காக வடமாநில இளைஞர் கொலை; பரபரத்த மதுரை

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

North State youth incident for cell phone;Madurai

 

இரவு நேரம் சாலையில் நடந்து சென்ற பீகார் மாநில தொழிலாளியை கொலை செய்து செல்போன் பறித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு பகுதியில் பீகாரைச் சேர்ந்த சுபேஷ்குமார் மற்றும் சன்னி ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு சாலை ஓரமாக நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு கும்பல் வடமாநில இளைஞர்களை வழிமறித்து செல்போனை கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதில் பைக்கில் வந்த கும்பல் வடமாநில தொழிலாளர்கள் இருவரையும் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த சுபேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் உயிரிழந்த சுபேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரவு வேளையில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்