Skip to main content

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 3 பேர் படுகாயம்

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

 Fireworks Factory issue 3 incident

 

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தின் போது பட்டாசு ஆலையில் இருந்த கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல்; பேரிடர் மீட்பு பணிக்கு வந்த அதிகாரி பலி!

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

The officer who came to the rescue was lost his lives at cyclone michaung

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மழைவெள்ள மீட்பு பணிக்காக சென்னை வந்தபோது மரத்தில் கார் மோதிய விபத்தில் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் மூர்த்தி (50). இவர் ராஜபாளையம் நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் தனது சக துப்புரவு ஆய்வாளரான பழனிகுரு (50) என்பவருடன் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிக்காக அரசு காரில் நேற்று முன் தினம் (04-12-23) ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டார். அந்த காரை டிரைவர் முருகானந்தம் என்பவர் ஓட்டி வந்தார். 

 

இதனையடுத்து, அவர்கள் வந்து கொண்டிருந்த கார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தனியார் கல்லூரி அருகில் நேற்று காலை 5 மணிக்கு வந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயபால் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்து வந்த பழனிகுரு, முருகானந்தம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

 

இந்த விபத்தை பற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி மைய விபத்து பாதுகாப்பு வாகன ஊழியர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். மேலும், அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து, ஜெயபால் மூர்த்தியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நூறு நாள் வேலை பார்த்த இடத்தில் மண்வெட்டி சண்டை - மருமகனைத் தாக்கிய மாமியார்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Mother-in-law who attacked her son-in-law in a spade fight where she worked for 100 days

 

சிவகாசி தாலுகா – எம்.புதுப்பட்டி–மங்கலம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்திக்கு  ராஜகுமாரியின் மகள் பவானியுடன்  திருமணம் நடந்தது.  கருத்து வேறுபாட்டினால் சத்தியமூர்த்தியிடமிருந்து பிரிந்த பவானி, தனது மகள் ஜெஷிகாவுடன் அம்மா வீட்டில் வசித்துவருகிறார். மாரியம்மன் கோவிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில், பேத்தி ஜெஷிகாவை அருகில் வைத்துக்கொண்டு ராஜகுமாரி நூறு நாள் வேலை பார்த்துக்கொண்டிருந்த இடத்துக்கு சத்தியமூர்த்தி சென்றபோது, அவரைப் பார்த்து அப்பா என்று கூப்பிட்டிருக்கிறார் ஜெஷிகா. இதைப் பார்த்து எரிச்சலான ராஜகுமாரி திட்டியிருக்கிறார். அதனால், சத்தியமூர்த்திக்கும் ராஜகுமாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

ஒருகட்டத்தில் ராஜகுமாரி ஆவேசமடைந்து தன் கையிலிருந்த மண்வெட்டியால் சத்தியமூர்த்தியின் தலையில் தாக்கியுள்ளார்.  அப்போது இன்னொரு உறவினரான குருவம்மாளும் தான் வைத்திருந்த மண்வெட்டியின் மரக்கட்டையால் சத்தியமூர்த்தியை மாறி மாறி அடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட்டபோது ராஜகுமாரியும் குருவம்மாளும் மண்வெட்டியைக் காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

தலையில் ஏற்பட்ட ரத்தக்காயத்துக்கு எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்ற சத்தியமூர்த்தி, அடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், எம்.புதுப்பட்டி காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார். ராஜகுமாரி மற்றும் குருவம்மாள் மீது வழக்கு பதிவாகி விசாரணை நடைபெற்று வருகிறது.  

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்