Skip to main content

திருப்பூரில் எலாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

 

 Fire at Tirupur Elastic Factory

 

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் பகுதியில் எலாஸ்டிக் கம்பெனி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர் .

 

பரமசிவம் என்பவருக்கு சொந்தமான எலாஸ்டிக் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருமுருகன்பூண்டி காவல்துறையினருக்கும், திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தற்போது தொடர்ந்து தீயை அணைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியே கரும்புகை சூழ்ந்த இடமாகக் காட்சியளிக்கிறது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !