Fire at Government Rubber Regulation Hall; Confusion in Kumari

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள நாகர்கோடு பகுதியில் தமிழ்நாடு அரசின் ரப்பர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று விற்பனை கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே கரும்புகையால் சூழ்ந்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவத்திற்கு வந்த குலசேகரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரப்பர் அனைத்தும் பற்றி எரிந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஊழியர்கள் இல்லை இதனால் உயிரிழப்பு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.