Skip to main content

பண மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக உத்தரவு!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
high court chennai

 

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, 3 கோடி ரூபாய் பண மோசடியில் சம்மந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட வழக்கு விசாரணைக்காக,  ஆகஸ்ட் 7-ஆம் தேதி, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நிதி நிறுவனம் ஆரம்பிப்பதாக கூறி  துளசி மணிகண்டன் என்பவரை, ரூ.3 கோடி மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது இராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

 

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பண மோசடியில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக, காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

 

இதையடுத்து, ஜூலை 24-ஆம் தேதி,  விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஞானவேல்ராஜாவுக்கு இராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இதைத்தொடர்ந்து, கரோனா தாக்கம் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும்,  அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என  ஞானவேல் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு, இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த மோசடியில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை.  முதல் தகவல் அறிக்கையில் கூட தன்னுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும், 3 கோடி ரூபாய் மோசடியை ரூ. 300 கோடி என காவல்துறை தவறாக குறிப்பிடுவதாக, ஞானவேல் ராஜா தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

 

இதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறை தரப்பில்,  நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே ஞானவேல் ராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், ஞானவேல் ராஜாவிடம் நேரில் விசாரணை நடத்தினால் மட்டுமே,  இந்த மோசடி வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என வாதிடப்பட்டது.

 

இதையடுத்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஆகஸ்ட் 7-ஆம் தேதி நேரில் ஆஜராகத் தவறினால், ஞானவேல்ராஜா மீது காவல்துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளோம்” - ஓ.பி.எஸ்.!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
“We have applied for an election symbol” - O.P.S.

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி அமைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகி மற்றும் தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ. பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் பக்கெட் வாளி, பலாப்பழம் சின்னம், திராட்சைப் பழம் சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம். என்னுடைய பலத்தை நிரூபிப்பதற்கு மட்டும் தேர்தலில் போட்டியிடவில்லை. அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர் வகுத்து தந்த சட்டவிதியின் படி தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அ.தி.மு.க.வை 50 ஆண்டுகளாக வழிநடத்தினார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையில் நாம் நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தலையாய குறிக்கோள். இதில் இருந்து மாறுபடக் கூடது என்பதுதான் என்னுடைய குறிக்கோள். அதன்படி தான் நடக்க வேண்டும் என்பது தான் ஒன்றறை கோடி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நிலைப்பாடும், எண்ணமும் ஆகும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“உண்மைக்குப் புறம்பானது” - ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
producer abdul malik jaffar sadiq case issue

மலேஷியாவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக இருந்து வருகிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல்வேறு மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையைப் பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது.

இந்த நிலையில் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டதாக காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும்  தனக்கும் தொடர்பு உண்டு என்று பிரபல யூட்யூப் சேனல் உண்மைக்குப் புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் 5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.